பாகிஸ்தான் ஸ்டார் பிளேயருக்கு வந்த மோசமான நிலைமை – அவசர அவசரமாக லண்டன் பயணம்!

0
பாகிஸ்தான் ஸ்டார் பிளேயருக்கு வந்த மோசமான நிலைமை - அவசர அவசரமாக லண்டன் பயணம்!
பாகிஸ்தான் ஸ்டார் பிளேயருக்கு வந்த மோசமான நிலைமை - அவசர அவசரமாக லண்டன் பயணம்!

பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரான ஷாகின் அப்ரிடி காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகி, மேல் சிகிச்சைக்காக லண்டன் செல்ல உள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

லண்டன் செல்லும் ஷாகின் ஷாகின் அப்ரிடி!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 27 ஆம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் உலக அளவில் பல ரசிகர்கள் எதிர்பார்த்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்தது. ஏனெனில் கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக பத்து விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததால் அந்த தோல்விக்கு தற்போது பதிலடி கொடுத்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் அந்த டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்களை தொடர்ந்து வீழ்த்தி இந்திய அணியை நிலைகுலைய வைத்தவர் தான் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் அப்ரிடி. ஆனால் இந்த ஆண்டு ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது முழங்காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.

மேலும் இங்கு சரியான சிகிச்சை கிடைக்கவில்லை என்ற காரணத்தால் லண்டன் சென்று சிகிச்சை மேற்கொள்ள உள்ளார். இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வீரரின் நலன் கருதி அவரை லண்டன் அனுப்ப முடிவு செய்துள்ளோம். மேலும் அப்ரிடி அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலக கோப்பைக்கு முழு உடல் தகுதியுடன் பாகிஸ்தான் அணிக்கு திரும்புவார் எனவும் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here