கொரோனாவையே ஓரம் கட்டி அஜித்தின் வலிமை செய்த  சாதனை – கொண்டாட்டத்தில்  தல  ரசிகர்கள்!!

0

ட்விட்டர் நிறுவனம் ஹேஷ்டேக் தினத்தை முன்னிட்டு, இந்தியாவில் இந்த ஆண்டில் அதிகம் ட்ரெண்ட் ஆன முதல் 10 இடங்களை பிடித்த ஹேஷ்டேக்குகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் நடிகர் அஜித்தின் வலிமை படம் முதலிடத்தை பிடித்துள்ளது. குறிப்பாக மக்களை வாட்டி வதைத்த கொரோனாவே ஒன்பதாம் இடத்தில் உள்ளது. இதனால் குஷியான தல ரசிகர்கள் தற்போது இந்த செய்தியையும் ஷேர் செய்து வருகின்றனர்.

வலிமைக்கு அடுத்த படியாக இரண்டாம் இடத்தில் மாஸ்டர் ஹேஷ்டேக் உள்ளது. நான்காம் இடத்தில் அஜித்குமார் ஹேஷ்டேக்கும், ஐந்தாம் இடத்தில் தளபதி65 ஹேஷ்டேக்கும் உள்ளது.

மேலும் உலகையே தங்கள் இசையால் கட்டி போட்டிருக்கும் தென் கொரிய பாய் பாண்ட் ஆன BTS எட்டாம் இடத்திலும் உள்ளது. கடைசியாக வக்கீல் சாப் 10 வது இடத்திலும் உள்ளது. இந்தியாவில் பல மொழிகள் பேசப்பட்டாலும் பாலிவுட், டோலிவுட் இந்திய சினிமாவில் ஆதிக்கம் செலுத்தினாலும், தமிழ் சினிமா ட்விட்டரில் அதிகம் ஷேர் செய்யப்பட்ட ஹேஷ்டேக்குகளில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here