எளிதில் ஜீரணமாக இந்த வறுத்து அரைத்த இஞ்சி பச்சடிய ட்ரை பண்ணிப்பாருங்க… டாக்டர் கிட்ட போக வேண்டிய அவசியமே இருக்காது!!! 

0

தற்போது உள்ள சூழ்நிலையில் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறோம். மேலும் நம்மில் பலருக்கு உடல் உழைப்பு என்பது அறவே இல்லாமல் இருக்கிறது. இதனால் உடல் எடை அதிகரிப்பு, செரிமான பிரச்சனைகள் போன்றவை ஏற்படுகிறது. மேலும் இது நாளடைவில் மிக பெரிய விளைவுகளில்  கொண்டுபோய் விடுகிறது. இதனை ஆரம்பத்திலேயே சரி செய்ய நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் இஞ்சி, பூண்டு, பெருங்காயம் உள்ளிட்ட செரிமானத்திற்கு உதவும் பொருட்களை சேர்த்து கொள்ள வேண்டும். இந்நிலையில் இந்த பதிவில், செரிமானத்திற்கு பெரிதும் உதவும் வறுத்து அரைத்த இஞ்சி பச்சடி  எப்படி செய்வது என்பதை  காணலாம்.

தேவையான பொருட்கள்

இஞ்சி – 150 கிராம்

தேங்காய் துருவல்  – 1/4 கப்

புளி தண்ணீர் – 1/2 கப்

பெருங்காயம் – 1/4 தேக்கரண்டி

எண்ணெய் – 1 தேக்கரண்டி

மிளகாய் வற்றல் – 2

கடுகு – 1/4 தேக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

கருவேப்பிலை – சிறிதளவு

செய்முறை

முதலில் நன்கு சுத்தம் செய்த இஞ்சியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும். அதன் பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நறுக்கிய இஞ்சி துண்டுகள் சேர்த்து வதக்கவும், மேலும் அது பாதி வதங்கி வரும் வெளியில் தேங்காய் மற்றும் மிளகாய் வற்றல் சேர்த்து கொண்டு சிவக்க வதக்கி கொள்ளவும். வதக்கிய இந்த கலவை ஆறிய பின் அதை நன்கு விழுதாக அரைத்து கொள்ளவும்.

இதையடுத்து மற்றொரு கடாயில் எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் அரைத்த கலவை, பெருங்காயம், புளி தண்ணீர், உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். பின்னர்  எண்ணெய் பிரிந்து கிச்சடி பதத்திற்கு வந்ததும் இறக்கி விடவும். தற்போது சுவையான மற்றும் ஆரோக்கியமான கேரளா ஸ்டைல் வறுத்து அரைத்த இஞ்சி பச்சடி ரெடி.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here