பொன்னியின் செல்வன் பட விழாவில் அதிர்ச்சி – மேடையிலேயே அசிங்கப்படுத்தப்பட்ட முக்கிய பிரபலம்!!

0
பொன்னியின் செல்வன் பட விழாவில் அதிர்ச்சி - மேடையிலேயே அசிங்கப்படுத்தப்பட்ட முக்கிய பிரபலம்!!
பொன்னியின் செல்வன் பட விழாவில் அதிர்ச்சி - மேடையிலேயே அசிங்கப்படுத்தப்பட்ட முக்கிய பிரபலம்!!

அண்மையில் மிக பிரமாண்டமாக நடந்த பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவிற்கு பிரபல ஏழுத்தாளரை ஏன் அழைக்கவில்லை என்ற கேள்விக்கு இயக்குனர் கொடுத்த பதில் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது .

பொன்னியின் செல்வன்:

தற்போது ஒட்டுமொத்த திரையுலகமே எதிர் பார்த்து காத்து கொண்டிருக்கும் திரைப்படம் என்றால் அது மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் தான். இப்படம் மொத்தம் 2 பாகங்களாக உருவாகி வரும் நிலையில், முதல் பாகம் வருகிற செப் 30 தேதி வெளியாக இருக்கிறது. தற்போது இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதற்கான பிரஸ் மீட் நிகழ்ச்சியில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். அப்போது இயக்குனர் மணிரத்னத்திடம் அதிகமான கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பொறுமையாகவும், சுவாரஸ்யமாகவும் பதில் அளித்து வந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அந்த சமயத்தில் ஒரு பத்திரிகையாளர் சமீபத்தில் நடந்த இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு கவிஞர் வைரமுத்துவை ஏன் அழைக்கவில்லை? என்று கேள்வி எழுப்பினர். இதற்கு மணிரத்னம் எதிர்மறையாக பதிலளித்து மழுப்பியுள்ளார். அதாவது வைரமுத்து மிகப்பெரிய கவிஞர், அதிகமான படங்களில் அவருடன் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். தமிழில் எப்படி நமக்கு தெரியாத, நம்மால் அறிந்து கொள்ள முடியாத பல அம்சங்கள் உள்ளதோ, அதே போல் வைரமுத்துவையும் தாண்டி பல சிறந்த கவிஞர்களும் இருக்கிறார்கள் என்று கூறினார்.

ப்பா தரமான சம்பவம்.., வாரிசை அடிச்சு தூக்கிய துணிவு பஸ்ட் லுக்.., வெடி போட்டு கொண்டாடும் அஜித் ரசிகர்கள்!!

இந்த பதிலை கேட்டு பலரும் திகைத்து போயினர். ஆனால் மணிரத்தினத்தின் இந்த பதிலுக்கு பின்னால் ஒரு காரணமும் இருக்கிறது. அதாவது வைரமுத்துவின் மீது சமீப காலமாக புகார்கள் கிளம்பி வருகிறது. அதிலும் குறிப்பாக பாடகி சின்மயி தெரிவித்த பாலியல் மீடு புகார் பற்றி பெரிய அளவில் பேசப்பட்டது . இதுதான் மணிரத்னம் வைரமுத்துவை புறக்கணிக்க காரணம் என்று கோலிவுட்டில் பேசப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here