செஸ் அப்டேட்.., காலிறுதிக்கு முன்னேறிய டீனேஜ் கிராண்ட் மாஸ்டர்கள்.., இந்திய வீரர்களின் அபாரம்!!

0
செஸ் அப்டேட்.., காலிறுதிக்கு முன்னேறிய டீனேஜ் கிராண்ட் மாஸ்டர்கள்.., இந்திய வீரர்களின் அபாரம்!!
செஸ் அப்டேட்.., காலிறுதிக்கு முன்னேறிய டீனேஜ் கிராண்ட் மாஸ்டர்கள்.., இந்திய வீரர்களின் அபாரம்!!

16 பேர்கள் விளையாடிய ஜூலியஸ் பேர் கோப்பை செஸ் போட்டியில் சில வீரர்கள் மட்டும் காலிறுதி ஆட்டத்திற்கு முன்னேறியுள்ளனர்.

செஸ் ஆட்டம்

ஜூலியஸ் பேர் கோப்பை செஸ் போட்டியில் உலகில் சிறந்த வீரர்கள் ஆன்லைன் வழியாக விளையாடி வருகின்றனர். 16 பேர் கலந்து கொண்ட இந்த செஸ் போட்டியில் இதுவரை தகுதி சுற்று ஆட்டங்கள் நடைபெற்றது. இந்த தகுதி சுற்று ஆட்டத்தின் முடிவில் பலர் காலிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளனர். இதில் இந்திய வீரர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

அதன் படி தகுதி சுற்று ஆட்டத்தின் அடிப்படையில் உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சன் 34 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இதனை தொடர்ந்து 25 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் எரிகைசியும், 24 புள்ளிகளுடன் 3வது இடத்தில் அமெரிக்க வீரர் ஹான்ஸ் நீமன் உள்ளார்.

மாப்பு வச்சுட்டான்டா ஆப்பு.., ஆஸ்திரேலியாவுக்கு காத்திருக்கும் ட்விஸ்ட்.., இந்தியாவோட திட்டம் இது தானா??

இதன் பிறகு டீனேஜ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா 23 புள்ளிகளுடன் 4 வது இடத்தில் உள்ளனர். இவர்கள் அனைவருமே தற்போது காலிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளனர். இதில் பிரக்ஞானந்தா மற்றும் எரிகைசி இருவரும் இந்திய வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீரர்களுக்கு இடையிலான காலிறுதி ஆட்டம் நாளை தொடங்க உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here