ரயில் பயணிகளுக்கு வெளியான சர்ப்ரைஸ் – இதுவரை இல்லாத புத்தம் புதிய திட்டம் அமல்!!

0
ரயில் பயணிகளுக்கு வெளியான சர்ப்ரைஸ் - இதுவரை இல்லாத புத்தம் புதிய திட்டம் அமல்!!
ரயில் பயணிகளுக்கு வெளியான சர்ப்ரைஸ் - இதுவரை இல்லாத புத்தம் புதிய திட்டம் அமல்!!

சென்னையில், புது முயற்சியாக ஓட்டுனர்கள் இல்லாமல் தாமாகவே இயங்கும் வகையில் மெட்ரோ ரயில் பெட்டிகள் வடிவமைக்கப்பட்டு உள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மெட்ரோ ரயில்கள்:

சென்னையில் கடுமையான போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், நீண்ட தொலைவை குறைந்த நேரத்தில் கடந்து செல்வதற்காகவும் மெட்ரோ ரயில் சேவை கடந்த 2015ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மேலும் சென்னை மாநகரின் முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில் இந்த மெட்ரோ ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதாவது சென்னையில் இரண்டு வழித்தடங்களில் 55 கி.மீ. தூரத்துக்கு தினமும் காலை 5 மணியிலிருந்து இரவு 11 மணி வரை 42 ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மெட்ரோ ரயில் சேவைக்கு சென்னைவாசிகள் நல்ல ஆதரவை தந்து வருகின்றனர்.

பாவம்யா நெல்சன்.., தொடர்ந்து விழும் அடி.., ஜெயிலர் படத்துக்கு வந்த புதிய சிக்கல் – பேரதிர்ச்சியில் படக்குழு!!

இந்நிலையில் புதிய முயற்சியாக, மெட்ரோ ரயில் நிர்வாகம், புதிதாக அமைய உள்ள 3 வழித்தடங்களில் ஓட்டுனர்கள் இல்லாமல் இயங்கக்கூடிய மெட்ரோ ரயில் பெட்டிகள் வடிவமைக்கப்பட்டு உள்ளதாக நிர்வாகம் தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த ரயில் பெட்டிகளை தயாரிப்பு செய்வதற்கு, மெட்ரோ ரயில் நிர்வாகம் ஒப்பந்தம் வழங்கியுள்ளது. இதையடுத்து தற்போது நடைபெற்று வருகிற 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் 2026 ஆம் ஆண்டுக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here