இரண்டு நாட்களில் வீடு திரும்பும் வைகை புயல் வடிவேலு – மருத்துவமனை அறிக்கையால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!

0

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட வடிவேலு தற்போது கொரோனா தொற்றில் மீண்டு இரண்டு அல்லது மூன்று நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

நடிகர் வடிவேலு:

பிரபலமான காமெடி நாயகனான நடிகர் வடிவேலு இதுவரை 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இறுதியாக விஜய்யுடன் இணைந்து மெர்சல் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதற்கு பிறகு மீண்டும் இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ”நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” என்னும் திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். சுராஜ் இயக்கத்தில் ஏற்கனவே வடிவேலு தலைநகரம், மருதமலை, கத்தி சண்டை ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலை காரணமாக வடிவேலு மற்றும் இயக்குனர் ஆகியோர் லண்டன் சென்றனர். லண்டனில் இருந்து திரும்பி வரும் போது இவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அந்த பரிசோதனையில் வடிவேலுக்கு கொரோனா இருப்பது உறுதியாக்கப்பட்டது. பின்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் தற்போது வடிவேலு கொரோனா தொற்றில் மீண்டு 2 அல்லது 3 நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது. இதனால் வடிவேலு ரசிகர்கள் மன நிம்மதியில் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here