வாடிவாசல் படத்தின் டைட்டில் லுக் தேதி வெளியீடு…!கொண்டாட்டத்தில் சூர்யா ரசிகர்கள்!!!

0

ஜல்லிக்கட்டை மையமாக கொண்டு இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் இயக்கி வரும் படம் வாடிவாசல். இந்த படத்தில் நடிகர் சூர்யா நடித்து வருகிறார். இந்த படத்தின்  டைட்டில் லுக் நாளை அதாவது ஜூலை 16ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. இந்த தகவல் நடிகர் சூர்யா ரசிகர்கள் மத்தியில் குஷியை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் சூர்யா, கவுதம் மேனன் அவர்களின் தயாரிப்பில் உருவாகும் நவரச எனப்படும் 9 உணர்வுகளை மையமாக வைத்து 9 இயக்குனர்கள் இயக்கும் படத்தில் காதல் உணர்வை பிரதிபலிக்கும் படத்தில் சூர்யா நடித்து வருகிறார். அதை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில், பெயர் சூட்டப்படாத சூர்யா 40 என்ற படத்தில்  நடித்து வருகிறார். அதே வேளையில் சூர்யா அவர்கள் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் இந்த படம் ஜல்லிக்கட்டு தொடர்பான கதைக்களத்தை மையாக கொண்டது. இந்த படத்தின் மூலம் தான் சூர்யா மற்றும் வெற்றிமாறன் முதன் முதலில் கூட்டணி சேர்க்கின்றனர். எனவே இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது. மேலும் இந்த படத்திற்கு கூடுதல் பலமாக ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளார்.

இந்நிலையில் இந்தப் படத்திற்கான புது அப்டேட் வெளியாகி உள்ளது. அதாவது இந்த படத்தின் டைட்டில் லுக் நாளை மாலை 5.30 மணி அளவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தகவல் சூர்யா ரசிகர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here