என்னடா சொல்றீங்க.., வாடிவாசல் படத்தில் அஜீத்தா? டிவிஸ்ட் வைத்த வெற்றிமாறன் – வெளியான முக்கிய தகவல்!!

0
என்னடா சொல்றீங்க.., வாடிவாசல் படத்தில் அஜீத்தா? டிவிஸ்ட் வைத்த வெற்றிமாறன் - வெளியான முக்கிய தகவல்!!
தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வரும் இயக்குனர்களில்.முக்கியமானவர் தான் வெற்றி மாறன். பெயரில் வெற்றி என்று இருப்பதாலோ என்னவோ தொட்டதில் எல்லாமே வெற்றி பெற்று வருகிறார். தற்போது விடுதலை 2 படத்தை இயக்கி வருகிறார். ஆனால் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பில் காத்து கொண்டிருக்கும் திரைப்படம் என்றால் அது வெற்றிமாறனின் வாடிவாசல் தான்.
இதில் நடிகர் சூர்யா ஹீரோவாக நடித்து வரும் நிலையில், சோசியல் மீடியாவில் சில செய்திகள் பரவி வந்தன.அதாவது வாடிவாசல் படத்தில் இருந்து சூர்யா விலகியதாகவும், அவருக்கு பதிலாக நடிகர் அஜித் குமார் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இந்த செய்தி முற்றிலும் பொய்யான தகவல் என்று கூறப்படுகிறது.கண்டிப்பாக வெற்றிமாறன் – அஜித் கூட்டணி புதிய படமாக தான் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. தற்போது அஜித் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here