அதிரடியாக வெளியான வாரிசு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ – ராஷ்மிகா வெளியிட்ட முக்கிய பதிவு!!

0
தளபதி வெறியர்களே தயாராகுங்க., அதிரடியாக வெளியாகும் விஜய்யின் என்ட்ரி சாங் - வைரலாகும் வாரிசு அப்டேட்!!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை, ராஷ்மிகா மந்தனா இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

போட்டோ வெளியீடு:

நடிகர் விஜய், தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார். பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், குஷ்பூ, சங்கீதா, சரத்குமார், பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வருகிற பொங்கலுக்கு படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

13  ஆண்டுகளுக்கு பின் விஜய்யுடன் இணையும் வில்லன் நடிகர் - அதிகாரப்பூர்வமாக வெளியான தளபதி 66 அப்டேட்!!

முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட் பாணியில் உருவாகி வரும் இந்த படம் ஆக்ஷன் கலந்ததாக இருக்கும் என கூறப்படுகிறது. தற்போது வாரிசு படத்தின், ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த போட்டோவில் ராஷ்மிகா மற்றும் சங்கீதா இருவரும் ஒரே ஆடையை உடுத்தியுள்ளனர்.

இவர்கள் இருவரும் சகோதரிகளாக இந்த படத்தில் நடிப்பதாக பேசப்படுகிறது. இவர்கள், இருவரும் எடுத்துக் கொண்ட இந்த போட்டோவை ராஷ்மிகா இணையத்தில் வெளியிட்டுள்ளார். தொடர்ந்து வாரிசு படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருவதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here