‘சர்ச்சைக்குரிய கருத்துக்களை பகிர்ந்தால் பாஸ்போர்ட் கிடையாது’ – உத்தரகண்ட் காவல்துறை அறிவிப்பு!!

0

தற்போது பாஸ்போர்ட் பெறுவதற்கு புதிய கட்டுப்பாடு ஒன்றை உத்தரகண்ட் காவல் துறையினர் அறிவித்துள்ளனர். இதனால் பாஸ்போர்ட் விண்ணப்பித்தவர்கள் சற்று அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உத்தரகண்ட்:

வெளிநாடு செல்வதற்காக அனைவருக்கும் தேவையாடும் ஒன்று தான் பாஸ்போர்ட். இதனை பெறுவதற்கு விண்ணப்பித்தால் அதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளது. நமது மேல் போலீசில் ஏதும் புகார் உள்ளதா உள்ளிட்ட பல விசாரணைகள் இதில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது இதில் புதிய கட்டுப்பாடு ஒன்றை உத்தரகண்ட் காவல்துறை டிஜிபி அறிவித்துள்ளார். இதனை அவர் தலைமையில் நடைபெற்ற போலீசார் கூட்டத்தில் கடந்த வியாழக்கிழமை அன்று தெரிவித்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இது தொடர்பாக டிஜிபி அசோக் குமார் கூறியதாவது, நாட்டில் தற்போது இணையதளம் மூல பல சர்ச்சைக்குரிய மற்றும் போலியான தகவல் பரவி வருகிறது. இதனை தடுக்கும் வகையில் தற்போது ஓர் முடிவெடுத்துள்ளோம். அது என்னவென்றால், இனி பாஸ்போர்ட் பதிவு பெரும் அனைவருக்கும் அவர்களது இணையத்தை ஆராய முடிவு செய்துள்ளோம். தேச விரோத செயல்களுக்கு ஆதரவாக எவரும் செயல் பட கூடாது என்னும் விதிக்கு ஆதரவாக இந்த கட்டுப்பாடை கொண்டுவந்துள்ளோம்.

#INDvsENG ரோஹித், விராட்டை கலாய்த்து தள்ளிய மீம் கிரியேட்டர்ஸ் – வைரலாகும் புகைப்படம்!!

ஒரு போலீஸ் அதிகாரியாக தேச விரோத செயலில் யாரும் ஈடுபடக்கூடாது என்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளேன். ஏதும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்தவர்களுக்கு பாஸ்போர்ட் இனி கிடைக்காது. மக்கள் அனைவரும் சமூகவலைத்தளங்களில் கவனமாக செயல்படவேண்டும் என்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளோம் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here