10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து.. ஜூலையில் 12ஆம் வகுப்பு தேர்வுகள் – அரசு அதிரடி அறிவிப்பு!!!!

0

உத்தரபிரதேச இடைநிலைக் கல்வி வாரியம், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்துள்ளது. அனைத்து 10 ஆம் வகுப்பு மாணவர்களும் 11 ஆம் வகுப்பிற்கு தேர்ச்சி பெறுவார்கள் என்று துணை முதல்வர் டாக்டர் தினேஷ் சர்மா இன்று ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இது குறித்து துணை முதல்வர் தினேஷ் சர்மா கூறியதாவது “12 ஆம் தேர்வுகள் ஜூலை இரண்டாவது வாரத்தில் நடத்தப்படும். இந்த முறை தேர்வு நேரம் 3 மணி நேரத்திற்கு பதிலாக 1.5 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது, இதில் மாணவர்கள் 10 கேள்விகளில் 3 கேள்விகளுக்கு மட்டுமே பதில்களை எழுத வேண்டும். உத்தரபிரதேச அரசு இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை குறித்து முடிவெடுக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

 

உத்தரபிரதேச இடைநிலைக் கல்வி வாரியம், முந்தைய தேர்வுகள் மற்றும் உள் மதிப்பீட்டின் அடிப்படையில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகளை வெளியிடும். இவ்வாறு உத்தரபிரதேச இடைநிலைக் கல்வி வாரியம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்வது இதுவே முதல் முறை. இதற்கு முன் பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

மேலும் துணை முதல்வர் தினேஷ் சர்மா, பொதுத்தேர்வுகள் குறித்த மேலும் சில முக்கிய முடிவுகள் மாநில முதல்வருடன் ஆலோசித்த பின்னரே தெரிவிக்கப்படும் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here