மாணவர்களின் விசா கட்டணத்தை உயர்த்திய அமெரிக்கா.., மே 30 முதல் அமல்!!

0
மாணவர்களின் விசா கட்டணத்தை உயர்த்திய அமெரிக்கா.., மே 30 முதல் அமல்!!
மாணவர்களின் விசா கட்டணத்தை உயர்த்திய அமெரிக்கா.., மே 30 முதல் அமல்!!

ஆண்டுதோறும் பெரும்பாலான மாணவர்கள் உயர்கல்வி பயில்வதற்காக சர்வதேச நாடுகளுக்கு சென்று கொண்டு இருக்கின்றனர். இதற்கான விசா ஒப்புதலை சம்பந்தப்பட்ட நாடுகள் குறிப்பிட்ட தொகைக்கு விநியோகித்து வருகிறது. அந்த வகையில் வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கான விசா கட்டணம் உயர்த்தபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அதன்படி 160 டாலராக (ரூ.12,800) இருந்த கட்டணம் 185 டாலராக (ரூ.14,800) உயர்த்தப்பட்டுள்ளது. இதில் இந்திய மாணவர்களுக்கு வரி உள்ளிட்ட செலவினங்களுடன் ரூ.15,140 விசா கட்டணம் வசூல் செய்யப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். அதேபோல் சர்வதேச நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் ஒப்பந்த வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கான விசா கட்டணமும் 110 டாலர் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்(10.04.2023) – முழு விவரம் உள்ளே!!

மேலும் இந்த கட்டண உயர்வு மே 30ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here