கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு விவகாரம்.., UGC பரிந்துரையால் கிளம்பிய சர்ச்சை..,  மத்திய கல்வி அமைச்சகத்தின் முடிவு என்ன??

0
கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு விவகாரம்.., UGC பரிந்துரையால் கிளம்பிய சர்ச்சை..,  மத்திய கல்வி அமைச்சகத்தின் முடிவு என்ன??
நாடு முழுவதும் உயர்கல்வி நிறுவனங்களில் நிரப்பப்படாமல் உள்ள SC, ST மற்றும் இதர பிற்படுத்த வகுப்பினருக்கான காலிப் பணியிடங்களை நீக்கம் செய்வதற்கான வரைமுறைகளை UGC நேற்று வெளியிட்டது. UGC யின் இந்த பரிந்துரைக்கு கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் என பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் இது குறித்து UGC முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது SC, ST ஆகிய பிரிவினருக்கு ஒதுக்கிய இடங்களை நிரப்ப சரியான ஆட்கள் கிடைக்கவில்லை. எனவேதான் இந்த இடங்களை பொது பிரிவுக்கு மாற்ற பரிந்துரைத்துள்ளோம். இதற்கான ஒப்புதல் மத்திய கல்வி அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. UGC யின் இந்த பரிந்துரையை மத்திய கல்வி அமைச்சகம் ஏற்றுக் கொண்டால் அனைத்து விதம் உயர்கல்வி நிறுவனங்களில் இந்த முறை அமலுக்கு வரும் என தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here