பல பிரச்சனைகளுக்கு பின் மீண்டும் ட்விட்டரில் வருகிறது ப்ளூடிக்..!!!

0

முன்னர் ட்விட்டர் தளத்தில் அக்கவுண்ட் வெரிபிகேஷன் சேவை வழங்கப்பட்டு, ப்ளூடிக் வசதி அளிக்கப்பட்டு வந்தது. பின்னர்  சில சர்ச்சைகள் காரணமாக இந்த சேவை நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் ட்விட்டர் இந்த ப்ளூடிக் வசதியை அதன் பயனர்களுக்கு அளிக்கவுள்ளது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சமூக வலைத்தளமான ட்விட்டரில் ஒருவர் அக்கவுண்ட் வைத்திருந்தால், அவை பிரபலங்கள், எழுத்தாளர்கள், ஊடகங்கள், பிசினஸ் தொடர்பான கணக்குகள் எனில்  ட்விட்டர் அவற்றை சரிபார்த்து ‘வெரிஃபைட்’ என ப்ளூ டிக் அளித்து வந்தது. இது அந்த கணக்கின் நம்பகத்தன்மையை மக்கள் மத்தியில் அதாவது அது போலியானது இல்லை என்பதை குறிக்கும் வகையில் இருந்து வந்தது.

பின்னர் இந்த வசதி சில பிரச்சனைகள் காரணமாக நீக்கப்ட்டது. தற்போது இந்த சேவை மீண்டும் வழங்கப்பட உள்ளது. இந்த ப்ளூடிக் வசதியை பெற அந்த அக்கவுண்ட் அரசாங்கம், நிறுவனங்கள், செய்தியாளர்கள், பொழுதுபோக்கு, விளையாட்டு மற்றும் பிற முக்கிய துறையை சார்ந்து இருக்க வேண்டும். அதோடு இந்த அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் கடந்த ஆறு மாதங்களில் ட்விட்டர் சேவையை தொடர்ச்சியாக பயன்படுத்தி இருக்க வேண்டும்.

மேற்குறிய விதிகளோடு, அந்த பயனர் ட்விட்டர் வழிமுறைகளை பின்பற்றி இருக்க வேண்டும். ட்விட்டர் தளத்தில் சமீப காலங்களில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வந்த புளூ டிக் வசதியும், மேலும் அதை பெற  ட்விட்டர்  கூறியுள்ள வழிகாட்டுதல்களும் தற்போது இணைய வாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here