ப்ளூ டிக் சேவை Stop.,இதை விட ஒரு மாஸ்டர் பிளான் இருக்கு, எலான் மஸ்கின் பரபரப்பு அறிக்கை!!

0
ப்ளூ டிக் சேவை Stop.,இதை விட ஒரு மாஸ்டர் பிளான் இருக்கு, எலான் மஸ்கின் பரபரப்பு அறிக்கை!!

ட்விட்டரில் ப்ளூ டிக் சேவையை நிறுத்த முடிவெடுத்துள்ளதாகவும், அதற்கு மாற்று ஏற்பாடாக ஒரு வழியை உருவாக்கியுள்ளதாகவும் மஸ்க் அறிவித்துள்ளார்.

எலான் மஸ்க் உறுதி :

ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகளை அண்மையில் வாங்கிய எலான் மஸ்க், அந்நிறுவனத்தில் குறிப்பிடத் தகுந்த பல மாற்றங்களை செய்தார். ஊழியர்கள் பணி நீக்கம், ப்ளூ டிக் சேவை நிறுத்தம், ட்விட்டர்  பதிவில் எடிட் செய்வது பல அதிரடி மாற்றங்களை செய்தார். இதனைத் தொடர்ந்து, ட்விட்டரில் ப்ளூ டிக்  எனப்படும் அதிகாரப்பூர்வ கணக்கு வைத்திருப்போரிடம் மாதந்தோறும் 8 டாலர் கட்டணம் வசூல் செய்ய உள்ளதாக அறிவித்தார்.

இதனால், தேவையற்ற நபர்கள் கட்டணம் செலுத்தி இந்த சேவையைப் பெற வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்பட்டது. இதையடுத்து இந்த சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக மஸ்க் அண்மையில் அறிவித்தார். தற்போது, இதனை எலான் மஸ்க் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
ப்ளூ டிக் சேவையை தற்காலிகமாக நிறுத்துவதாகவும், ப்ளூ கலருக்கு பதிலாக நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களுக்கு பல்வேறு கலர்களை தர திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். எலான் மஸ்கின் இந்த திடீர் பின்னடைவு பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here