புரோ கபடி: அதிரடி ஆட்டத்தால் மாஸ் காட்டிய தமிழ் தலைவாஸ்…, வீழ்ந்த பெங்கால் வாரியர்ஸ்!!

0
புரோ கபடி: அதிரடி ஆட்டத்தால் மாஸ் காட்டிய தமிழ் தலைவாஸ்..., வீழ்ந்த பெங்கால் வாரியர்ஸ்!!

புரோ கபடி லீக் தொடரில், பெங்கால் வாரியர்ஸ் அணிக்கு எதிராக பட்டையை கிளப்பிய நரேந்தரின் அதிரடியால் தமிழ் தலைவாஸ் அணி அசத்தலான வெற்றி பெற்றது.

புரோ கபடி:

புரோ கபடி லீக் தொடரின் இறுதி லீக் சுற்றுகள் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த லீக் சுற்றில், நேற்று தமிழ் தலைவாஸ் அணி, பெங்கால் வாரியர்ஸ் அணிக்கு எதிராக மோதியது. இதில், தமிழ் தலைவாஸ் அணி தொடக்கம் முதலே வேகம் காட்ட தொடங்கியது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனால், ஆட்டத்தின் முதல் பாதியில் தமிழ் தலைவாஸ் அணி 21-13 என்ற புள்ளி கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதையடுத்து தொடங்கிய 2வது பாதியில், பெங்கால் வாரியர்ஸ் அணி புள்ளிகளை சேர்க்க ஆரமித்தது. ஆனாலும், தமிழ் தலைவாஸ் நரேந்தரின் அதிரடி ஆட்டத்தால், 35-30 என்ற புள்ளி வித்தியாசத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணி தோல்வியை தழுவியது.

இதில், தமிழ் தலைவாஸ் வெற்றி பெற்றதால், 43 புள்ளிகளுடன் 12 அணிகள் கொண்ட புள்ளி பட்டியல், 8 வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இதே போல, மற்றொரு ஆட்டத்தில், UP யோதாஸ் அணிக்கு எதிராக குஜராத் ஜெயண்ட்ஸ் விளையாடியது. இதில், UP யோதாஸ் 35-31 என்ற புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம், 50 புள்ளிகளுடன் 4வது இடத்தை UP யோதாஸ் எட்டி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here