கொரோனாவிற்கு ‘குங் ப்ளூ’ என பெயரிட்டுளேன் – டொனால்ட் டிரம்ப்..!

0
trump
trump

கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு முழு காரணம் சீனா தான் என்று குற்றம் சாற்றி வரும் டிரம்ப் கொரோனாவுக்கு ‛குங் ஃப்ளூ’ என்ற புதிய பெயரை சூட்டியுள்ளார்.

கொரோனா

2019 இல் சீனாவில் இருந்து பரவிய இந்த கொரோனா தற்போது அனைத்து நாடுகளிலும் பரவி வருகிறது. இதுவரை 90 லட்சத்து 23 ஆயிரத்து 895 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 லட்சத்து 69 ஆயிரத்து 382 பேர் பலியாகி உள்ளனர். 47 லட்சத்து 92 ஆயிரத்து 450 பேர் மீண்டுள்ளனர். இதில் அமெரிக்கா தான் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 23.5 லட்சம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Corona update
Corona update

இது வரை 1.22 லட்சம் பேர் உயிரிழந்துளனர். இந்த கொரோனா உலக வல்லரசு நாடுகளையே ஸ்தம்பிக்க வைத்துள்ளது எனவும் கூறலாம். மேலும் அமெரிக்காவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு, வேலையிழப்பு உள்ளிட்டவற்றால் உலக பொருளாதாரம் மந்தநிலையை எதிர்கொண்டு வருகிறது.

அமெரிக்கா அதிபர்

அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதத்தில் அதிபர் பதவிக்கான தேர்தல் நடக்க உள்ளது. இதனை அடுத்து குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடேன் போட்டியிடுகிறார். வழக்கமாக, அமெரிக்க அதிகாரிகள், கொரோனா வைரஸ் தொற்றை வூஹான் வைரஸ் என குறிப்பிட்டு வருகின்றனர். தற்போது சனி கிழமையன்று , ஓகலகாமாவில் அதிபர் தேர்தலுக்கான முதல் பிரசாரத்தை துவங்கிய டிரம்ப் கூறியதாவது, “கோவிட்-19 என்பது நோய் மற்றும் அதற்கு வரலாற்றில் எந்த நோய்க்கும் இல்லாத அளவுக்கு பல பெயர்கள் உள்ளது. நான் குங் ஃப்ளூ என பெயரிட்டுள்ளேன்.

trump
trump

இந்த 19 வகையான வித்தியாசமான பெயர்களை என்னால் வைக்க முடியும். பலர் இதனை வைரஸ் என அழைக்கின்றனர். பலர் இதை காய்ச்சல் என்று அழைக்கின்றனர். என்ன வித்தியாசம். நம்மிடம் 19 அல்லது 20 வகையிலான பெயர்கள் இருக்கிறதென நினைக்கிறேன்.” இவ்வாறு அவர் பேசினார். சீனாவின் பாரம்பரிய தற்காப்பு கலையான குங்ஃபூவை கிண்டலடித்து டிரம்ப் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here