பூரி ஜெகநாதர் ரத யாத்திரை கூட்டம் இல்லாமல் நடத்த மத்திய அரசு வேண்டுகோள்..!

0
puri-jagannath-rath-yatra
puri-jagannath-rath-yatra

கொரோனாவால் நாட்டில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றனர். தற்போது பூரி ஜெகநாதர் ஆலய ரத யாத்திரைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததை அடுத்து ஆலய ரத யாத்திரை மக்கள் கூட்டம் இல்லாமல் நடத்த அனுமதிக்க கோரி மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பூரி ஜெகநாதர் ஆலயம்

ஒடிசா மாநிலத்தில் உள்ள கடற்கரை நகரான பூரியில் ஜெகந்நாதர் கோயில் புகழ்பெற்றது. இங்கு மூலவர்களாக பாலபத்ரா, அவரின் சகோதரர் ஜெகந்நாதர், சகோதரி தேவி சுபத்ரா ஆகியோருடன் சுதர்சன சக்கரமுமம் உடன் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த மூன்று மூலவர்களுக்கு புதிய தேர் செய்யப்படுவது வழக்கம். அதில் அவர்கள் அமர்ந்து நகரை வலம் வருவார்கள். இந்த திருவிழாவை நடத்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

பூரி ஜெகநாதர் ஆலயம்
பூரி ஜெகநாதர் ஆலயம்

இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாட்டே தலைமையிலான அமர்வு, அதிகளவில் மக்கள் கூடுவதை அனுமதிக்க முடியாது. தற்போது அனுமதி கொடுத்தால் ஜெகநாதரே மன்னிக்கமாட்டார் எனக்கூறி பூரி ஜெகநாதர் ஆலய ரத யாத்திரைக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.

மறுபரிசீலனை

இதனை தொடர்ந்து நீதிபதிகளின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யுமாறு சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. பூரி ஜெகன்நாதர் ஆலயத்தின் ரத யாத்திரையை நடத்துவதற்கான பாதுகாப்பு திட்டங்கள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த வழக்கு இன்று நீதிபதி ரவீந்திர பட் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

court order
court order

இந்த கொரோனா வைரஸ் தொற்றை கருத்தில் கொண்டு பொதுமக்கள் இல்லாமல் இந்த ஆண்டு பூரி பகவான் ஜெகன்நாத் ரத யாத்திரை நடத்த அனுமதிக்கலாம். பல நூற்றாண்டுகளாக நடத்தப்படும் பாரம்பரியம் நிறுத்தப்படக்கூடாது. இது கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கைக்குரிய விஷயம். ஜெகன்நாதர் நாளை வெளியே வராவிட்டால், அவர் பாரம்பரியத்தின் படி 12 ஆண்டுகள் வெளியே வர முடியாது என்று மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கோர்ட்டில் வாதாடினார்.

இன்று விசாரணைக்கு வந்த வழக்கில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் மக்கள் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் கிடையாது என தெரிவித்துள்ளனர். மக்களுக்கு அனுமதி கிடையாது என உறுதி அளித்தால் இது குறித்து பரிசீலிக்கப்படும் என கூறியுள்ளனர்.  தற்போது இதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது. உரிய பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here