அமெரிக்க அதிபர் டிரம்பின் சமூகவலைதள பக்கங்கள்& கணக்குகள் முடக்கம் – அதிரடி நடவடிக்கை!!

0

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வன்முறையை தூண்டும் பதிவுகளை பதிவிட்டதாக அவரின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டதை தொடர்ந்து அவரின் பேஸ்புக் மற்றும் யூடியூப் கணக்குகள் அதிரடியாக முடக்கப்பட்டன.

பேஸ்புக் மற்றும் யூடியூப் கணக்குகள் முடக்கம்

உலகிலேயே முதல்முறையாக ஒரு அதிபரின் சமூகவலைதள கணக்குகள் முற்றிலுமாக முடக்கப்பட்டது இதுவே முதல்முறையாகும். அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ஆதரவாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும், வன்முறையை தூண்டும் வகையிலும் கருத்துக்களை பதிவிட்டதாக ட்விட்டர் நிறுவனம் அவரின் தனிப்பட்ட கணக்கை முடக்கம் செய்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

டிரம்ப் வன்முறையை தூண்டும் வகையில் அவர் பேசி வெளியிட்ட வீடியோக்களை ட்விட்டர் மற்றும் யூடியூப் கணக்கில் பதிவுசெய்திருந்தார். அந்த பதிவுகள் சமூக வலைதளமான பேஸ்புக் மற்றும் யூடியூபில் வேகமாக பரவியது. இந்த வீடியோக்கள் உடனடியாக அதன் சமூகவலைத்தள பக்கங்களிலிருந்து நீக்கப்பட்டது.

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மது அருந்தக்கூடாது – அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை!!

Donald J. Trump என்ற பெயரில் உள்ள அவரின் யூடியூப் சானலில் வெளிவந்த வீடியோ யூடியூப் நிறுவனத்தின் கொள்கைகளுக்கும் விதிமுறைகளுக்கும் எதிராக இருப்பதாக கூறி அந்த சானலை தாற்காலிகமாக தடை செய்துள்ளது யூடியூப் நிறுவனம். இந்த தற்காலிக தடை மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கலாம் எனவும் அதன் தரப்பிலிருந்து கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here