தமிழக ரயில் பயணிகளே., நாகர்கோவில் செல்லும் இந்த ரயில்கள் எல்லாம் ரத்து? ஏப்ரல் 1ஆம் தேதி வரை!!!

0
தமிழக ரயில் பயணிகளே., நாகர்கோவில் செல்லும் இந்த ரயில்கள் எல்லாம் ரத்து? ஏப்ரல் 1ஆம் தேதி வரை!!!

நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் ரயில் போக்குவரத்து விரிவாக்க பணி நடைபெற்று வருவதால், அந்த வழித்தடங்களில் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (மார்ச் 29) முதல் ஏப்ரல் 1ஆம் தேதி வரை நாகர்கோவில், கன்னியாகுமரி மற்றும் ஆரல்வாய்மொழி ஆகிய ரயில் வழித்தடத்தில், இரட்டை பாதை அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக கீழ்க்கண்ட ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி,

இன்று (மார்ச் 29) முதல் ஏப்ரல் 1ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்ட ரயில்கள்:

  • காலை 07.10க்கு திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவிலுக்கு புறப்படும் ரயில் (வ.எண்.06642),
  • காலை 08.20க்கு நாகர்கோவிலில் இருந்து கொச்சுவேலிக்கு புறப்படும் ரயில் (வ.எண்.06628),
  • காலை 10.35க்கு நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலிக்கு புறப்படும் ரயில் (வ.எண்.06643),
  • காலை 10.35க்கு நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரிக்கு புறப்படும் ரயில் (வ.எண்.06643),
  • மாலை 05.00 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு புறப்படும் ரயில் (வ.எண்.06435),
  • மாலை 06.50 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலிக்கு புறப்படும் ரயில் (வ.எண்.06647)

இது தவிர கொல்லம் to ஆலப்புழா to கொல்லம் செல்லும் ரயில் (வ.எண்.06670/06771) மற்றும் கொல்லம் to  திருவனந்தபுரம் செல்லும் ரயில் (வ.எண்.06425) ஆகிய ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.


அதேபோல் மார்ச் 30 (நாளை) முதல் ஏப்ரல் 1ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்ட ரயில்கள்:

  • மாலை 04.00 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து கொல்லத்திற்கு புறப்படும் ரயில் (வ.எண்.06773),
  • காலை 11.35 மணிக்கு கொல்லத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு புறப்படும் ரயில் (வ.எண்.06772) ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்திற்கு ஊதிய உயர்வு?? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here