தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான “எண்ணும் எழுத்தும்” பாடத்திட்ட பயிற்சி வகுப்பு., SCRET சிறப்பு ஏற்பாடு!!!

0
தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான
தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான "எண்ணும் எழுத்தும்" பாடத்திட்ட பயிற்சி வகுப்பு., SCRET சிறப்பு ஏற்பாடு!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 1 முதல் 3ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு “எண்ணும் எழுத்தும்” திட்டம் கடந்த ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் 2022-23ம் கல்வியாண்டு முடிவடைந்துள்ளதால் 2023-24ம் கல்வியாண்டுக்கான முதல் பருவத்திற்கான தமிழ், ஆங்கிலம், மற்றும் கணிதம் பாடப்பொருள் தயார் நிலையில் உள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த பாடப்பொருளை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 3 கட்டமாக பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி மதுரை நாகமலை புதுக்கோட்டையில் மாநில அளவிலான பயிற்சி வருகிற மே 5 முதல் 8ம் தேதி வரை விடுமுறை(மே 7) தினம் போக 3 நாட்கள் வழங்கப்பட உள்ளது. மாவட்ட அளவிலான பயிற்சி மே10 முதல் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதேபோல் ஒன்றிய அளவிலான பயிற்சி மே 24 முதல் 26ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

லியோ பட அப்டேட்..,  இதை நாங்க கொஞ்சம் கூட எதிர்பார்க்கல.., அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட படக்குழு!!

எனவே இத்திட்டத்தில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள், பயிற்றுநர்கள், DIET கல்வியாளர்கள் ஆகியோர் பயிற்சி வகுப்பு நடைபெறும் இடத்திற்கு முதல் நாள் இரவு 8 மணிக்குள் வர வேண்டும். அதற்கேற்றாற் போல் விடுமுறைகளை வழங்க வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வியாளர்களுக்கு SCRET (மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்) அறிவுறுத்தியுள்ளது. மேலும் மாவட்ட மற்றும் ஒன்றிய அளவிலான பயிற்சி வகுப்புகளை ஏற்பாடு செய்ய Programme and Activities நிதியிலிருந்து மேற்கொள்ளவும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here