வாகன ஓட்டிகள் கவனத்திற்கு.., இந்த பகுதியில் திடீரென போக்குவரத்து மாற்றம்.., முழு விவரம் இதோ!!

0
வாகன ஓட்டிகள் கவனத்திற்கு.., இந்த பகுதியில் திடீரென போக்குவரத்து மாற்றம்.., முழு விவரம் இதோ!!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழகத்திற்கு வருகிறார். அதன்படி பிப்ரவரி 27 ஆம் தேதி பகல் 1.20 மணிக்கு திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து கோவையில் உள்ள சூலூர் விமானப்படை தளத்திற்கு வந்து சேர்கிறார். அங்கிருந்து பல்லடம் மாதப்பூர் ஊராட்சி பகுதியில் நடக்கும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். இப்படி இரண்டு நாட்கள் தொடர் பயணமாக பிரதமர் மோடி மதுரைக்கு வருவதால் இந்த நாட்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அதன்படி திருச்சியில் இருந்து மதுரை வரும் வாகனங்கள் ஒத்தக்கடை, மாட்டுத்தாவணி வழி செல்லலாம். அதே போன்று திருச்சியில் இருந்து தூத்துக்குடி, விருதுநகர், நெல்லைக்கு வரும் வாகனங்கள் ஒத்தக்கடை வழியாக செல்ல வேண்டும். சிவகங்கையில் இருந்து மதுரை, திருச்சி செல்லும் வாகனங்கள் பூவந்தி வழியாக செல்ல வேண்டும். ராமநாதபுரத்தில் இருந்து மதுரை திருச்சி செல்லும் வாகனங்கள் சக்குடி பாலம் வழியாக செல்ல வேண்டும். தூத்துக்குடியில் இருந்து மதுரை, திருச்சி செல்லும் வாகனங்கள் ஏமுக்குளம் சந்திப்பு வழியாக சென்றடைய வேண்டும்.

டெலிக்ராம்:Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here