அடுத்தடுத்து விற்பனைக்கு வரும் டாப் 5 பைக்குகள் – குஷியில் பைக் பிரியர்கள்..!

0

கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள் இந்தியாவின் வாகனத்துறைக்கு நெருடிக்களை ஏற்படுத்தியுள்ளன. தற்போது ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை சரி செய்திட வாகன நிறுவனங்கள் பல்வேறு புதிய ரக இருசக்கர வாகனங்களை அடுத்தடுத்து விற்பனைக்கு கொண்டுவரவுள்ளன.

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர்..!

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அடுத்ததாக பிஎஸ்-6 விதிக்குட்பட்ட எக்ஸ்ட்ரீம் 200 எஸ் மற்றும் எக்ஸ்பிளஸ் 200டி மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. அதனுடைன் எக்ஸ்ட்ரீம் 160ஆர் மாடலை விற்பனைக்கு கொண்டுவரவும் திட்டமிடப்பட்டுள்ளது.

சிறப்புகள்..!

அகலமான ஹேண்டில்பார், உறுதியான கட்டமைப்புடன் கூடிய எரிபொருள் கலன், கருப்பு நிறத்திலான எஞ்சின் பகுதி, உயர்த்தி வைக்கப்பட்ட இருக்கை, எல்.இ.டி டர்ன் இன்டிகேட்டர்களுடன் கூடிய எல்.இ.டி பின்பக்க விளக்குகள், கருப்பு நிற அலாய் சக்கரங்கள் போன்றவை இந்த பைக்கிற்கு வழங்கப்பட்டுள்ளன.

Bajaj Discover 100 & 125 பைக்குகள் விற்பனை இந்தியாவில் நிறுத்தம் – வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..!

இந்த பைக்கில் பிஎஸ்6 160சிசி எஞ்சின் உள்ளது. இது 15 பிஎச்பி பவர் மற்றும் 14 என்.எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக வழங்கும்.

யமஹா எஃப்.இசட்.எஸ் 25..!

250 சிசி பைக் செக்மென்டில் புதியதாக யமஹா எஃப்.இசட்.எஸ் 25. யமஹா எஃப்.இசட் 25 நேக்கிடு ஸ்ட்ரீட்ஃபைட்டர் மாடலின் ஸ்போர்டியர் வெர்ஷன் தான் இந்த பைக்.

சிறப்புகள்..!

யமஹா எஃப்.சிஅட்.எஸ் 25 பைக்கில் 249 சிசி ஏர்கூல்டு எஞ்சின் வழங்கப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 20.5 பிஎச்பி பவர், 20 என்.எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக வெளிப்படுத்தும். யமஹா எஃப்.இசட்.எஸ் 25 மாடலில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ட்ரையம்ப் டிரிபிள் ஸ்ட்ரீட் ஆர்.எஸ்..!

ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட பிறகே இந்த ட்ரையம்ப் டிரிபிள் ஸ்ட்ரீட் ஆர்.எஸ் பைக் அறிமுகம் ய்யப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.

சிறப்புகள்..!

இந்த பைக்கில் 5 அங்குல டிஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், மை ட்ரையம்ப் கனெக்ட்டிவிட்டி, கோப்ரோ உரையாடல் கருவி, நேவிகேஷன் வசதி உள்ளிட்ட பல்வேறு நவீன தொழில்நுட்ப அமைப்புகள் உள்ளன. இதிலுள்ள 765 சிசி ட்ரிபிள்-சிலிண்டர் எஞ்சின் மூலம் 121 பிஎச்பி பவர் மற்றும் 79 என்.எம் டார்க் திறன் அதிகப்பட்சமாக கிடைக்கும்.

டொயோட்டா ஹெரியர் எஸ்யூவி காரின் தோற்றம் லீக் – இதோ..!

கேடிஎம் 250 அட்வெஞ்சர்..!

2020ம் ஆண்டு மத்தியில் கேடிஎம் 250 அட்வெஞ்சர் பைக் விற்பனைக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறப்புகள்..!

கேடிஎம் நிறுவனத்தின் 250 டியூக் எஞ்சின் இந்த பைக்கிற்கு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 30 பிஎச்பி பவர் மற்றும் 24 என்.எம் டார்க் திறன் அதிகப்பட்சமாக கிடைக்கும்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here