டொயோட்டா ஹெரியர் எஸ்யூவி காரின் தோற்றம் லீக் – இதோ..!

0

டொயோட்டா நிறுவனம் புதிய ஹெரியர் எஸ்யூவி கார் இந்த வருட இறுதியில் ஜப்பானில் அறிமுகமாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது எஸ்யூவி மாடலின் டீசர் வீடியோ ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது.

காரின் கட்டமைப்புகள்..!

புதிய டொயோட்டா ஹெரியர் மாடல் மிக நீண்டதாகவும் சாய்வான ரூஃப்லைனை கொண்டதாகவும் காட்சியளிக்கிறது. முன்புறத்தில் இந்த எஸ்யூவி கார் சற்று மேற்புறமாக வளைக்கப்பட்ட க்ரில்லை கூர்மையான எல்இடி ஹெட்லேம்ப் உடன் கொண்டுள்ளது.

பின்புறத்தில் அகலமான எல்இடி டெயில் லேம்ப்கள் பின்புற கதவுக்கு குறுக்காக கொடுக்கப்பட்டுள்ளன. மற்ற முக்கிய வசதிகளாக எலக்ட்ரோக்ரோமிக் சன்ரூஃப் மற்றும் டேஸ் கேம் ஒருங்கிணைக்கப்பட்ட விங் மிரர்கள் உள்ளிட்டவை உள்ளன. இந்த 2021 ஹெரியர் மாடல் டொயோட்டாவின் புதிய க்ளோபல் கட்டமைப்பில் (டிஎன்ஜிஏ) தயாரிக்கப்பட்டு வருகிறது.

என்ஜின் சிறப்புகள்..!

இந்த என்ஜின் 172 பிஎச்பி பவரையும், 203 என்எம் டார்க் திறனையும் அதிகப்பட்சமாக வெளிப்படுத்தும். மேலும் கேம்ரி ஹைப்ரீட் மாடலில் உள்ள 2.5 லிட்டர் பெட்ரோல் + எலக்ட்ரிக் மோட்டார் அமைப்பு அப்படியே இந்த எஸ்யூவி காருக்கும் வழங்கப்படவுள்ளது. இந்த ஹைப்ரீட் என்ஜின் அமைப்பின் மூலமாக 211 பிஎச்பி பவரை அதிகப்பட்சமாக பெற முடியும்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here