தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை – கவலையில் நகைப்பிரியர்கள்!!

0

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. நாளுக்கு நாள் தங்கத்தின் விலை உயர்ந்து வருவதால் சுபநிகழ்ச்சிகள் நடத்துபவர்கள் தங்கம் வாங்குவதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர். தற்போது இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலை வெளியாகியுள்ளது.

தங்கம்:

கடந்த ஆண்டு கொரோனா காலங்களில் இருந்தே தங்கத்தின் விலை குறைந்தும், உயர்ந்தும் வருகிறது. மேலும் கடந்த ஆண்டு வரலாறு காணாத வகையில் தங்கத்தின் விலை உயர்ந்தது. அதன் பிறகு தங்கத்தின் விலை குறைந்தாலும் பெரிய அளவில் குறையவில்லை. இதனால் தங்கம் வாங்க முடியாமல் நகைப்பிரியர்கள் மற்றும் சுபநிகழ்ச்சிகள் நடத்துபவர்கள் கவலையில் ஆழ்ந்தனர். இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்:

சென்னையில் இன்றைய நிலவரப்படி 1கிராம் ஆபரணதங்கத்தின் விலை நேற்றைய விலையில் இருந்து 1 ரூபாய் அதிகமாகி ரூ.4,857 ஆக விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 1 சவுரன் ஆபரணதங்கத்தின் விலை 8 ரூபாய் உயர்ந்து ரூ.38,856க்கு சென்னையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதே போல் தூயத்தங்கம் 1 கிராமிற்கு 1 ரூபாய் உயர்ந்து ரூ.5,241க்கு வியற்பனை செய்பட்டு வருகிறது. மேலும் 1 சவுரன் தூயதங்கத்தின் விலை 8 ரூபாய் உயர்ந்து ரூ.41,928க்கு சென்னையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலை இன்றைய நிலவரப்படி சிறிது குறைந்துள்ளது. 1 கிராம் வெள்ளி தற்போது ரூ.74.30க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் 1 கிலோ கட்டி வெள்ளி ரூ.74,300க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

‘ஜோ பைடனை வெள்ளை மாளிகைக்குள் விட மாட்டேன்’ – டிரம்ப் அதிரடி பேட்டி!!

மாநில வாரியாக 1 கிராம் ஆபரணதங்கத்தின் விலை:

மும்பை – 5,302
பெங்களூரு – 4,800
ஹைதராபாத் – 4,800
கேரளா – 4,737
டெல்லி – 5,015
ஓசூர் – 4,798
கொல்கத்தா – 5,056
பாண்டிச்சேரி – 4,798

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here