தினமும் புதிய உச்சத்தை தொட்டு வந்தது பெட்ரோல் மற்றும் டீசல் விலை. மெல்ல மெல்ல அதன் விலை அதிகரித்து மக்களை பாடாய் படுத்தி வருகிறது. இந்நிலையில் இன்று சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை எந்தவித மாற்றத்தையும் எதிர்கொள்ளாமல் நேற்றைய விலையிலேயே தொடர்ந்து நீடிக்கிறது.
கொரோனா காலத்திலும் சிறிதும் கருணை காட்டாமல் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்ந்து கொண்டே போனது. கடந்த ஜூன் மாதத்தின் தொடக்கத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.95.76-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.89.90-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இந்த மிக முக்கிய எரிபொருட்களின் விலை படிப்படியாக அதிகரித்து தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களிலும் மற்றும் அண்டை மாநிலங்களிலும் 100ரூபாயை கடந்து விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை ஏற்றத்தை கண்டித்து பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியும் போராட்டங்களை நடத்தியும் வருகின்றனர்.
இருப்பினும் அதன் விலை குறைந்தபாடு இல்லை. இது மக்களை மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. அதன் வகையில் சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசலின் விலை எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலையே விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி ஒரு லிட்டர் பெட்ரோல் 99.80ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 93.72ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதன் விலை இன்றாவது குறையும் என்று மக்கள் எதிர்பார்த்த நிலையில், மாற்றம் இல்லாமல் தொடர்ந்து மூன்றாவது நாளாக அதே விலையில் நீடிக்கிறது. இது மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை தந்து உள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்