மனம் திருந்தி கண்ணம்மாவின் வீட்டிற்கு ஹேமாவை அழைத்து வரும் பாரதி – அனல்பறக்கும் ‘பாரதி கண்ணம்மா’ எபிசோடு!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது எதிர்பாராத திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வந்த நிலையில் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் ஹேமா இன்றைய எபிசோடில் கண்முழித்து தன்னை காப்பாற்றியது சமையல் அம்மா தான் என்ற உண்மையை சொல்கிறார். அப்பொழுது தான் பாரதிக்கு புத்தியே வருகிறது. வெண்பாவிற்கு அங்கு நடப்பது எதுவுமே புடிக்கவே இல்லை.

எப்படியோ தன்னை அடையாளம் கட்டாதவரையில் சரி தான் என்று விட்டுவிட்டார். இந்நிலையில் ப்ரோமோ ஒன்றை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. அதாவது வீம்பாக இருந்த பாரதி மனமிரங்கி ஹேமாவை அழைத்துக்கொண்டு கண்ணம்மா வீட்டிற்கு செல்கிறார். கண்ணம்மாவிற்கு இது பெரும் ஷாக்காகிறது.

பகையை மனதில் வைக்காமல் வாங்க என்று அழைக்கிறார். அவங்களுக்கு சமைத்து கொடுக்க ஹேமா எங்க அப்பாவிற்கு பிடித்த டேஸ்ட்ல எப்படி கரெக்ட்டா சமைச்சு இருக்கீங்க என்று கேட்கிறார். கண்ணம்மாவிற்கு பழைய நினைவுகள் வருகிறது. ஆனாலும் மனதில் வைத்து கொள்ளாமல் சாப்பிடுங்க என்று சொல்கிறார்.

அதன் பிறகு பாரதி மனமிறங்கி கண்ணம்மாவிடம் நன்றி சொல்கிறார். ஹேமாவை காப்பாற்றியதற்கு மிகவும் நன்றி என்று கூறுகிறார். இந்த ப்ரோமோவை பார்த்து பலரும் ஆச்சரியத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here