நீட் தேர்வை ரத்து செய்ய அதிமுக முழு ஒத்துழைப்பு தரும் – தமிழக முதல்வருக்கு ஓ.பன்னிர் செல்வம் வேண்டுகோள்!!!

0
நீட் தேர்வை ரத்து செய்ய அதிமுக முழு ஒத்துழைப்பு தரும் - தமிழக முதல்வருக்கு ஓ.பன்னிர் செல்வம் வேண்டுகோள்!!!
நீட் தேர்வை ரத்து செய்ய அதிமுக முழு ஒத்துழைப்பு தரும் - தமிழக முதல்வருக்கு ஓ.பன்னிர் செல்வம் வேண்டுகோள்!!!

திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை றது செய்யப்படும் என்று திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதன்படி இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பின் மதிப்பெண் பட்டியலை வைத்து மருத்துவ படிப்பிற்க்கான சேர்க்கையை நடைபெற செய்யுமாறு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தமிழக முதல்வருக்கு தெரிவித்துள்ளார். இதற்க்கு அதிமுக முழு ஒத்துழைப்பும் தருமென்றும் குறிப்பிட்டுள்ளார்.

நீட் தேர்வை ரத்து செய்ய அதிமுக முழு ஒத்துழைப்பு அளிக்கும்…

தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு அதிக எதிர்ப்புகள் இருந்து வருகின்றது. நீட் தேர்வால் பல எதிர்கால மருத்துவர்களை தமிழகம் இழந்தது. நன்றக பயிலக்கூடிய மாணவர்கள் நீட் தேர்வால் மருத்துவ படிப்பை கைவிட்டனர். நடந்து முடிந்த தமிழக தேர்தலில் 10 ஆண்டுக்கு பின் திமுக ஆட்சியை பிடித்தது. ஆட்சியை பிடித்த ஒரு மாதத்திலேயே பல நல திட்டங்களையும் செய்து சிறப்பான ஆட்சியை செய்து வருகிறது. திமுக தலைவர் தேர்தல் பிரச்சாரத்தின் போது நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார். அந்த வாக்குறுதியை பற்றி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார். அதாவது நீட் தேர்வு நடக்க மூலகாரணமே திமுகதான் ஆனால் இப்பொழுது நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவது குழந்தையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவது போல் உள்ளது என்றார் பு

நீட் தேர்வை ரத்து செய்ய அதிமுக முழு ஒத்துழைப்பு அளிக்கும்...
நீட் தேர்வை ரத்து செய்ய அதிமுக முழு ஒத்துழைப்பு அளிக்கும்…

ரட்சித் தலைவி ஜெ ஜெயலலிதா நீட் தேர்வு மற்றும் மற்ற அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் வேண்டாம் என்று எதித்து போராடினார் இறுதி மூச்சு வரை எதிர்த்தவர். அவர்களின் கொள்கையையும் வழியிலும்தான் அஇஅதிமுக பின்பற்றி வருகிறது, இந்நிலையில் கிராமப்புற, தமிழ்வழி, பொருளாதாரத்தால் பின்தங்கிய மாணவர்கள் என பலரும் இந்த நீட் தேர்வால் மருத்துவ படிப்பை இழந்துவிடுகின்றனர் அல்லது படிக்கும் ஆசையை விட்டுவிடுகின்றனர். எனவே திமுக அளித்த வாக்குறுதியை விரைவில் நிறைவேற்ற வேண்டும்.

அதுமட்டுமில்லாமல் நீட் தேர்வை முழுமையாக தமிழகத்தில் ரத்து செய்ய வேண்டும், இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பின் மதிப்பெண் பட்டியலை அடிப்படியாக வைத்து மருத்துவ படிப்பிற்க்கான மாணவர்கள் சேர்க்கையை நடத்த வேண்டும், வருகின்ற சட்டப்பேரவை கூட்டத்தில் நீட் தேர்வு ரத்து செய்யும் சட்ட மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் சட்டமாக்க வேண்டும் என்றும் இதற்கு அஇஅதிமுக முழு ஒத்துழைப்பு தருமென்றும் தெரிவித்துளளார். இதற்க்கான செயல்பாடுகளை விரைந்து செயல்படுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் அவர்களை கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னிர் செல்வம்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here