இன்று உலக கேன்சர் தினம் – வருமுன் காப்போம்..!

0

உலகம் முழுவதும் கேன்சர் (புற்றுநோய்) பாதிப்பை தடுப்பது, சிகிச்சை முறைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இன்று (பிப்ரவரி 4) சர்வதேச கேன்சர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இது சர்வதேச கேன்சர் கட்டுப்பாடு அமைப்பால் அனுசரிக்கப்படுகிறது. “நான் இருக்கிறேன், நான் இருப்பேன்” (I CAN, I WILL) என்பது இந்த ஆண்டு மையகருத்தாக எடுத்துக்கொள்ளப்பட்டு உள்ளது.

என்னென்ன கேன்சர்..?

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

கேன்சர் ஆனது உடலில் ஒரு செல்லில் இருந்து மற்றொரு செல்லிற்கு பரவக்கூடியது. இது எய்ட்ஸ்க்கு அடுத்தபடியாக மிக மோசமான உயிர்கொல்லி நோயாக உள்ளது. இவற்றைக் கட்டுப்படுத்துவது மிக கடினமாகும், அதனால் இது உடல் உறுப்புகள் அனைத்திற்கும் பரவி பாதிப்பை ஏற்படுத்துகிறது. நுரையீரல் கேன்சர், மார்பக கேன்சர், தோல் கேன்சர், வயிறு கேன்சர், நாக்கு கேன்சர், தொண்டை கேன்சர் போன்ற பலவகை கேன்சர் நோய்கள் உள்ளன.

காத்துக்கொள்வது எவ்வாறு..?

Image result for telegram logo

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

கேன்சரிற்கு என்று ஒரே சிகிச்சை முறை இல்லை. இது வயது, அதன் நிலை, உடல்நிலை ஆகியவற்றை பொறுத்து மாறுபடும். ரேடியேஷன், கீமோதெரபி, இம்மினோ தெரபி, ஹார்மோன் தெரபி, ஜென் தெரபி ஆகியவற்றை உள்ளடக்கிய பல்வேறு வித சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதனை துவக்கத்திலேயே கண்டறிந்தால் 40% பாதிப்பில் இருந்து தடுக்க முடியும்.

70% புகையிலை தான் காரணம்..!

புற்றுநோய்களில் 70% புகையிலையால் தான் வருகிறது. ஆண்டுக்கு ஆண்டு புகையிலை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. சிகரெட்டில் நிக்கோடின் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நச்சுத்தன்மை கொண்ட பொருட்கள் உள்ளன.

வருமுன் காப்போம்..!

புற்றுநோயில் இருந்து பாதுகாக்க புகையிலை, மது போன்ற தீய பழக்கங்களை கைவிட வேண்டும். மேலும் உடல் எடையை சீராக பராமரிக்க வேண்டும். துரித உணவுகள், பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் பண்டங்கள், பிளாஸ்டிக் கவரில் உணவு ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

Image result for youtube logo

யூடூப் சேனலில் தகவல்களைப் பெற இங்கே கிளிக்செய்யவும்

உலகில் ஆண்டு தொடரும் 96 லட்சம் பேர் புற்றுநோயால் உயிர் இழக்கின்றனர். அதாவது ஒரு நிமிடத்திற்கு 17 உயிர் இழப்புகள் நிகழ்கின்றன. இவற்றைத் தடுக்க நாம் தான் நல்ல பழக்கவழக்கங்களை பழக வேண்டும். தீயவற்றை கைவிட வேண்டும்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here