ராக்கெட் வேகத்தில் ஏறிய தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 552 ரூபாய் குறைந்து உள்ளது. இதனால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.
தொடர்ந்து ஏற்றம்..!
கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக இருப்பதால் நாடுகளுக்கு இடையில் ஏற்றுமதி – இறக்குமதி வர்த்தகம் பெரிதும் பாதிப்பு அடைந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது அதிகம் முதலீடு செய்வதால் தொடர்ந்து தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.
இன்றைய நாள் தங்கம் கிராமுக்கு 69 ரூபாய் குறைந்து ரூ. 4,097 க்கும், ஒரு சவரன் 552 ரூபாய் குறைந்து ரூ. 32,776 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 60 காசுகள் குறைந்து ரூ. 52.70 க்கும், கிலோ ரூ. 52,700 க்கும் விற்பனை ஆகிறது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |