TNUSRB இரண்டாம் நிலை காவலர் தேர்விலும் முறைகேடா..? வேலூரில் ஒரே ஹாலில் எழுதியவர்கள் அதிகளவில் பாஸ் ஆனதால் சர்ச்சை..!

1

தமிழ்நாடு சீருடை சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (TNUSRB) நடத்திய 8826 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கான தேர்வில் முறைகேடு நடைபெற்று உள்ளதாக தற்போது வலைத்தளங்களில் புகார்கள் எழுந்து உள்ளது. ஏற்கனவே குரூப் 4, குரூப் 2a தேர்வு முறைகேடு சர்ச்சைகள் மற்றும் விசாரணைகள் இன்னும் முடியாத நிலையில் தற்போது இந்த சர்ச்சை வேறு எழுந்து உள்ளதால் தேர்வர்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர்.

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

TNUSRB இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கான தேர்வர்களுக்கு நவம்பர் 01 அன்று உடல் தகுதி சோதனை ஆனது நடைபெற்றது. இதற்கான இறுதி தேர்வு பட்டியலும் பிப்ரவரி 4 அன்று வெளியிடப்பட்டது. இதில் வேலூர் மாவட்டத்தில் இருந்து மட்டும் 2000 பேருக்கு மேல் தேர்ச்சியானதாக தகவல் வெளிவந்து உள்ளது.

25 வயது நிரம்பியவர் எப்படி..?

Image result for telegram logo

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

TNUSRB முறைகேடு குறித்து தற்போது வாட்ஸஅப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் புகார்கள் எழுந்து உள்ளன. அதில் தரவரிசையில் 9ம் இடம் பெற்று இருப்பவர் பிறந்த தேதி 17/05/1992 ஆக உள்ளது. ஆனால் பொதுப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட 1993 ஜூன் மாதத்திற்குள் பிறந்தவர்கள் (25 வயதுக்கு உட்பட்டவர்கள்) தான் விண்ணப்பிக்க வேண்டும். இவர் எவ்வாறு தேர்வானார் என்ற கேள்வியும் எழுந்து உள்ளது.

ஒரே ஹாலில் எழுதியர்கள் அதிகளவில் தேர்ச்சி..!

மேலும் இந்த முறை வேலூர் மாவட்டத்தில் இருந்து மட்டும் 2000 நபர்களுக்கு மேல் இந்த தேர்வில் தேர்ச்சி அடைந்து உள்ளனர். அதிலும் ஒரே தேர்வறையில் எழுதியவர்கள் அதிக அளவில் தேர்ச்சி அடைந்து உள்ளதும் பெரும் சந்தேகத்தை எழுப்பி உள்ளது. இது தொடர்பாக வாட்ஸஅப் இல் செய்திகள் பரவி வருகிறது

Image result for youtube logo

யூடூப் சேனலில் தகவல்களைப் பெற இங்கே கிளிக்செய்யவும்

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here