தமிழக போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக் எதிரொலி., ஆம்னி பேருந்துகள் சங்கம் வெளியிட்ட அப்டேட்!!

0

தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறையில் பணிபுரியும் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று (ஜன. 8) நள்ளிரவு முதல் வேலை நிறுத்தம் செய்துள்ளனர். இதனால் உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர் செல்லும் பயணிகள் பலரும் அரசுப் பேருந்து வசதி கிடைக்காமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இருந்தாலும் ஆம்னி பேருந்துகள் அனைத்தும் வழக்கம் போல் இயக்கப்பட்டதால் பலரும் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில் ஒப்பந்த தொழிலாளர்களை கொண்டு அரசு பேருந்துகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் இயக்கி வந்தாலும் பல்வேறு பகுதிகளிலும் 100 சதவீதம் பேருந்துகள் இயக்கப்படவில்லை. எனவே நேற்று இரவு போல பகல் வேலைகளிலும் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தமிழகத்தில் ஒத்திவைக்கப்பட்ட பல்கலைக்கழக தேர்வுகள்.., இந்த தேதியில் தான் நடக்கும்.., கல்லூரி நிர்வாகம் அறிவிப்பு!!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here