TNPSC குரூப் 4.., தமிழில் கேட்கப்படும் முக்கிய கேள்வி.., வீடியோவுடன் விளக்கம் உள்ளே!!

0
TNPSC குரூப் 1 தேர்வுக்கு தயாராகுறீங்களா? இந்த புக் மெட்டீரியல் இருக்கா? பிரபல நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!!!

TNPSC குரூப் 4.., தமிழில் கேட்கப்படும் முக்கிய கேள்வி.., வீடியோவுடன் விளக்கம் உள்ளே!!

அரசு வேலையில் எப்படியாவது அமர வேண்டும் என்பதற்காக பலரும் போட்டி போட்டு கொண்டு தயாராகி வருகின்றனர். என்ன தான் பல Guide பயன்படுத்தி படித்தாலும் அது சரியாக புரியவில்லை என்றால் கொஞ்சம் கஷ்டம் தான். மேலும் அதிகமானோர் எழுதும் தேர்வாக இருப்பது TNPSC குரூப் 4 தான்.

அதில் தமிழில் இருந்து தான் 100 கேள்விகள் கேட்கப்படுகிறது. அதனாலேயே பலரும் தமிழுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படித்து வருகின்றனர். இதன்படி அடிக்கடி கேட்கப்படும் கேள்வி குறித்த முழு விளக்கத்தையும் கீழே பார்க்கலாம்.

எதுகை

எதுகை என்பது சீர்களின் அடிப்படையில் இரண்டாவது எழுத்து ஒன்றாக இருப்பது. சீர் என்பது ஒரு அடியில் இடம் பெற்றுள்ள வார்த்தைகளை குறிப்பிடுவது. அதன்படி எதுகை 7 வகைப்படும்.

எதுகை வகைகள்

  • இணை எதுகை (ஒரு அடியில் 1,2 சீர்களில் இரண்டாவது எழுத்து ஒன்றாக அமைவது)
  • பொழிப்பு எதுகை (ஒரு அடியில் 1,3 சீர்களில் இரண்டாவது எழுத்து ஒன்றாக அமைவது)
  • ஒரூஉ எதுகை (ஒரு அடியில் 1,4 சீர்களில் இரண்டாவது எழுத்து ஒன்றாக அமைவது)
  • கூழை எதுகை (ஒரு அடியில் 1,2,3 சீர்களில் இரண்டாவது எழுத்து ஒன்றாக அமைவது)
  • கீழ்க்கதுவாய் எதுகை (ஒரு அடியில் 1,2, 4 சீர்களில் இரண்டாவது எழுத்து ஒன்றாக அமைவது)
  • மேற்க்கதுவாய் எதுகை (ஒரு அடியில் 1,3, 4 சீர்களில் இரண்டாவது எழுத்து ஒன்றாக அமைவது)
  • முற்று எதுகை (ஒரு அடியில் 1,2, 3, 4 சீர்களில் இரண்டாவது எழுத்து ஒன்றாக அமைவது)
  • இதுகுறித்த முழு விபரங்களும் கீழே கொடுப்பட்ட வீடியோவில் உள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by sudha Rajendran (@sudha_examsdaily)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here