TNPSC தேர்வர்களே…, இந்த முக்கியமான 12 கேள்விக்கு சரியான விடை தெரியுமா?? கண்டுபிடிச்ச நீங்க தேர்வுக்கு பக்காவா ரெடி ஆயிட்டாங்க!!

0
TNPSC தேர்வர்களே..., இந்த முக்கியமான 12 கேள்விக்கு சரியான விடை தெரியுமா?? கண்டுபிடிச்ச நீங்க தேர்வுக்கு பக்காவா ரெடி ஆயிட்டாங்க!!
TNPSC தேர்வர்களே..., இந்த முக்கியமான 12 கேள்விக்கு சரியான விடை தெரியுமா?? கண்டுபிடிச்ச நீங்க தேர்வுக்கு பக்காவா ரெடி ஆயிட்டாங்க!!

சமீபத்தில், தமிழகத்தின் அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு குறித்த அப்டேட்டை TNPSC வெளியிட்டு இருந்தது. இதன்படி, வரும் நவம்பர் மாதம் இந்த குரூப் 4 தேர்வுக்கான முக்கிய அறிவிப்புகளை TNPSC வெளியிட உள்ளதாக அறிவித்திருந்தது. இந்த தேர்வுக்கு இப்போதிலிருந்தே தயாரானால் மட்டுமே, அரசு பணிக்கான வெற்றி கனியை தேர்வர்கள் சுவைக்க முடியும். இதனால், தேர்வர்களுக்கு உதவும் வகையில், முக்கியமான 12 கேள்விகள் இங்கு தொகுக்கப்பட்டு, விடைகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்


1. “இந்திய அரசியலில் சாணக்கியர்” என்று போற்றப்படுபவர்

(A) காந்தியடிகள் (B) பாலகங்காதர திலகர் (C) இராசகோபாலாச்சாரியார் (D) சர்தார் வல்லபாய் படேல்

2. ‘சட்டை’ என்ற சிறுகதையை எழுதியவர்

(A) பார்த்தசாரதி (B) ஜெயகாந்தன் (C) மீரா (D) புதுமைப்பித்தன்

3. ஜி.யு. போப் தொகுத்த நூலின் பெயர்

(A) கலம்பகம் (B) காவலூர்க்கலம்பகம் (C) கதம்பமாலை (D) தமிழ்ச்செய்யுட் கலம்பகம்

4. முடக்கு வாதத்தை சரி செய்யப் பயன்படும் ஜிம்னோஸ்பெர்ம் தாவரம் எது?

(A) அரக்கேரியா (B) எபிட்ரா (C) நீட்டம் (D) பைனஸ்

5. உலக பெண் குழந்தைகள் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

(A) ஜனவரி 8 (B) ஜனவரி 21 (C) ஜனவரி 22 (D) ஜனவரி 24

6. ஆகஸ்ட் மாதம், 2016-ல், ஐக்கிய நாடுகள் சபையில் எந்த இசைக் கலைஞர் கௌரவிக்கப்பட்டார்?

(A) M.S. சுப்புலட்சுமி (B) ஆஷா போஸ்லே (C) லதா மங்கேஷ்கர் (D) M.S.ராஜலட்சுமி

7. இந்திய அரசியல் அமைப்பின் சரத்து 63 குறிப்பிடுவது

(A) துணை குடியரசுத் தலைவர் (B) குடியரசுத் தலைவர் (C) பிரதம மந்திரி (D)ஆளுநர்

8. “முணுமுணுக்கும் அரங்கம்”- என்று அழைக்கப்படுவது எது?

(A) கோல்கொண்டா (B) கோல்கும்பாஸ் (C) குல்பர்கா(D) ஜும்மா மசூதி

9. களப்பிரர் காலத்தில் மதுரையில் திராவிட சங்கத்தை ஏற்படுத்திய சமணத் துறவி

(A) வஜ்ஜிரநந்தி (B) பார்சவ முனிவர் (C ) மகாவீரர் (D) மகா கசபர்

10. ஒரு நகரத்தின் மக்கள் தொகை 2014-ல் 1,80,000. அது ஒவ்வொரு ஆண்டும் 20% பெருகுமானால் 2016-ஆம் ஆண்டு மக்கள் தொகை என்ன?

(A) 2,40,000 (B) 2,59,200 (C) 2,55,000 (D) 2,54,300

11. A ஒரு வேலையை 20 நாட்களிலும், B அதை 25 நாட்களிலும் செய்து முடிப்பர். இருவரும் சேர்ந்து அவ்வேலையை செய்து ரூ. 3,600-ஐ ஈட்டினால் அத்தொகையில் A-ன் பங்கு?

(A) ரூ.1,600 (B) ரூ.2,000 (C) ரூ.3,000 (D) ரூ.3.100

12. ஒரு கன செவ்வகத்தின் அகலம், உயரம், கன அளவு முறையே 10 செ.மீ., 11 செ.மீ. மற்றும் 3080 செ.மீ எனில் அதன் நீளத்தை கண்டறிக.

(A) 21 செ.மீ. (B) 28 செ.மீ. (C) 24 செ.மீ. (D) 30 செ.மீ.

மேலே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகள் அனைத்திற்கு உங்களுக்கு பதில் அளிக்க முடிகிறதா?? இது போன்ற, தேர்வு தயாராகுவதற்கான கேள்விகள் அடங்கிய பயிற்சி வகுப்புகளை பிரபல Examsdaily நிறுவனம் உங்களுக்காகவே நடத்தி வருகிறது. இத்தகைய பயிற்சி வகுப்புகளை தகுந்த முறையில் பயன்படுத்தி கொண்டு, தேர்வில் வெற்றி பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தேர்வுக்கு தயாராகுங்கள்.

TNPSC GROUP 4 ONLINE COURSE APPLY NOW 

Call us at 8101234234

விடைகள்:

1. (C) இராசகோபாலாச்சாரியார்
2. (B) ஜெயகாந்தன்
3. (D) தமிழ்ச்செய்யுட் கலம்பகம்
4. (C) நீட்டம்
5. (D) ஜனவரி 24
6. (A) M.S. சுப்புலட்சுமி
7. (A) துணை குடியரசுத் தலைவர்
8. (B) கோல்கும்பாஸ்
9. (A) வஜ்ஜிரநந்தி
10. (B) 2,59,200
11. (B) ரூ.2,000
12. (B) 28 செ.மீ.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here