டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முறைகேடு – இடைத்தரகர் தொடர்பு

0
TNPSC

டிஎன்பிஎஸ்சி (தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்) நடத்திய குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகார்களை தொடர்ந்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இதில் சிவகங்கை பகுதியை சேர்ந்த இடைத்தரகர் ஒருவரின் தொடர்பு இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

தேர்வில் முறைகேடு

கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி டிஎன்பிஎஸ்சி காலியாக உள்ள 9398 பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 4 தேர்வினை மாநிலம் முழுவதும் நடத்தியது. இத்தேர்வினை தமிழகம் முழுவதும் 16 லட்சத்து 29 ஆயிரத்து 865 பேர் எழுதினர். இதற்கான முடிவுகளும் நவம்பர் 12ம் தேதி வெளியிடப்பட்டது. இதற்கான தரவரிசை பட்டியலில் முதல் 40 இடத்தைப் பிடித்தவர்கள் ராமேஸ்வரத்தில் உள்ள கீழக்கரை தேர்வு மையத்தில் எழுதியவர்கள் என்பது தெரிய வந்தது. ஒரே இடத்தைச் சேர்ந்தவர்கள் முதல் 100 இடங்களுக்குள் வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் முதல் அவ்வூரில் தேர்வெழுதி முதல் 40 இடத்திற்குள் வந்தவர்கள் வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். எனவே இது குறித்து விசாரிக்குமாறு தேர்வர்களும், அரசியல் கட்சியினரும் தெரிவித்து வந்தனர்.

இடைத்தரகர் தொடர்பு

சிவகங்கை பெரிய கண்ணனுரைச் சேர்ந்த ஒருவர் இதில் இடைத்தரகர் ஆக செயல்பட்டு பலருக்கும் அரசாங்க பனி வாங்கி கொடுத்துள்ளதாக தேர்வர்கள் புகார் கூறியுள்ளனர்.

குரூப் 2 – 13 லட்சம், குரூப் 4 – 9 லட்சம் ருபாய்!!

இடைத்தரகர் சென்னையில் உள்ள அரசுத்துறையில் பணிபுரிபவர். இவர் தேர்வாணைய அதிகாரிகள் சிலரின் உதவியுடன் இந்த மோசடியில் ஈடுபடுகிறார். இவர் கடந்த மூன்று ஆண்டுகளில் 200க்கும் மேற்பட்ட நபர்களுக்கு பணி நியமனம் வாங்கி கொடுத்துள்ளார். கடந்த 2017-18 ஆண்டுகளில் நடைபெற்ற குரூப் 2a தேர்வில் ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்வெழுதிய பலருக்கு வேலை கிடைத்துள்ளது. ஆனால் அவர்கள் அனைவரும் வெவ்வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

குரூப் 2a பணி நியமனத்திற்கு 13 லட்சம் ரூபாய், குரூப் 4 பணிக்கு 9 லட்சம் ரூபாய் வரை வாங்கி உள்ளார். மேலும் அவரது உறவினர்களுக்கும் அடுத்தடுத்து பணி நியமனம் பெற்றுக் கொடுத்துள்ளார். மேலும் பணம் செலுத்துபவர்கள் ராமநாதபுரத்தில் தான் தேர்வெழுத வேண்டும் எனவும் இதற்காக சென்னையில் பயிற்சி கொடுக்கப்படுவதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து உரிய விசாரணை நடத்துமாறு தேர்வர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here