TNPSC குரூப் 4 தேர்வர்களே…, 2014 & 2016 யில் கேட்கப்பட்ட முக்கிய கணித வினாக்கள்…, உங்களால் முடிந்தால் விடையளியுங்கள்!!

0
TNPSC குரூப் 4 தேர்வர்களே..., 2014 & 2016 யில் கேட்கப்பட்ட முக்கிய கணித வினாக்கள்..., உங்களால் முடிந்தால் விடையளியுங்கள்!!
TNPSC குரூப் 4 தேர்வர்களே..., 2014 & 2016 யில் கேட்கப்பட்ட முக்கிய கணித வினாக்கள்..., உங்களால் முடிந்தால் விடையளியுங்கள்!!

TNPSC தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வுக்காக, தேர்வர்கள் அனைவரும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இத்தகைய தேர்வர்களுக்கு பெரும் உதவியாகவும், சிறந்த வழிகாட்டியாகவும் இருக்கும் வகையில், 2014 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் குரூப் 4 தேர்வில் கேட்கப்பட்ட முக்கிய கணித வினாக்களும், அதன் விடைகளும் கீழே தொகுக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளன.

1. ஓர் இணைகரத்தின் பரப்பு 300 ச.செ.மீ மற்றும் அடிப்பக்கம் 15 செ.மீ எனில் உயரம்

(A) 10செ.மீ

(B) 15 செ.மீ

(C) 20 செ.மீ

(D) 30 செ.மீ

2. A-க்கு B-ஐ போல் 2 மடங்கும் Bக்கு ஜேப் போல் 2 மடங்கும் கிடைக்கும்படி ரூ. 700-ஐ.பிரித்தால் அவர்கள் பெறும் தொகை எவ்வளவு?

(A) ரூ. 100, ரூ. 200, ரூ. 400

(B) ரூ. 200, ரூ.300, ரூ. 200

(C) ரூ. 300, ரூ. 200, ரூ.200

(D) ரூ. 400, ரூ. 200, ரூ.100

3. ஒரு நகரத்தின் மக்கள் தொகை 2014-ல் 1,80,000. அது ஒவ்வொரு ஆண்டும் 20% பெருகுமானால் 2016-ஆம் ஆண்டு மக்கள் தொகை என்ன?

(A) 2,40,000

(B) 2,59,200

(C) 2,55,000

(D) 2,54,300

4. 10 குழந்தைகளின் சராசரி மதிப்பெண் 80 எனில் அவர்களின் மொத்த மதிப்பெண்

(A) 200

(B) 300

(C) 800

(D) 400

5. ஒரு கூம்பு, அரை கோளம் மற்றும் உருளை ஆகியவை சம அடிப்பரப்பினைக் கொண்டுள்ளது. கூம்பின் உயரம் உருளையின் உயரத்திற்கு சமமாகவும், மேலும் இவ்வுயரம் அவற்றின் ஆரத்திற்கு சமமாகவும் இருந்தால் இம்மூன்றின் கன அளவுகளுக்கிடையே உள்ள விகிதம் காண்க.

(A) 2:3:4

(B) 1:2:3

(C) 2:1:3

(D) 3:2:5

6. ஒரு வீட்டின் விலை 15 லட்சம் ரூபாயிலிருந்து 12 லட்சம் ரூபாயாக குறைந்தது எனில் குறைந்த சதவீதம்

(A) 10%

(B) 20%

(C) 30%

(D) 40%

7. 1.75 ஆரம் கொண்ட ஒரு சக்கரம் உடைய ஒரு வண்டி 11 கி.மீ தூரத்தை கடக்க எத்தனை சுற்றுகள் சுற்ற வேண்டும்?

(A) 10

(B) 100

(C) 1000

(D) 10000

8. 1, 1, 2, 8, 3, 27, 4,… என்ற தொடரின் 4 -ற்கு அடுத்த உறுப்பு?

(A) 31

(B) 29

(C) 16

(D) 64

9. ரூ. 12,000-க்கு 10% வட்டி வீதம் எனில் இரண்டு ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டிக்கும் தனிவட்டிக்கும் உள்ள வித்தியாசம்

(A) ரூ.80

(B) ரூ.90

(C) ரூ.120

(D) ரூ. 100

10. ஓர் உணவு மேசையின் அடக்கவிலை ரூ. 8,400. A இம்மேசையை 10 மாத தவணைகளில் பெற நினைக்கிறார். அவரது மாதத் தவணை ரூ. 875 எனில் வட்டி வீதம் என்ன?

(A) 3%

(B) 5%

(C) 8%

(D) 10%

11. A ஒரு வேலையை 20 நாட்களிலும், B அதை 25 நாட்களிலும் செய்து முடிப்பர். இருவரும் சேர்ந்து அவ்வேலையை செய்து ரூ. 3,600-ஐ ஈட்டினால் அத்தொகையில் A-ன் பங்கு

(A) ரூ.1.600

(B) ரூ.2,000

(C) ரூ.3,000

(D) ரூ.3,100

12. ஒரு முக்கோணத்தின் அடிப்பக்கம், உயரத்தின் 4 மடங்குக்கு சமம் மற்றும் அதன் பரப்பளவு 50 மீ எனில் அதன் அடிப்பக்க அளவு

(A) 10 15

(B) 15 மீ

(C) 20 மீ

(D) 25 மீ

இது போன்ற முக்கியமான கணித வினாக்களுடன், இந்த வினாக்கள் தொடர்பான விரிவான விளக்கங்கள், கூடுதல் தகவல்களையும் சேர்ந்து, பிரபல Examsdaily நிறுவனம் அனுபவம் உள்ள ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. சுமார் ரூ. 7,500 மதிப்பிலான இத்தகைய பயிற்சி வகுப்புகளை தேர்வர்கள் சிறந்த முறையில் பயன்படுத்தி கொண்டு, தேர்வில் வெற்றி பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தேர்வுக்கு தயாராகுங்கள்.

TNPSC GROUP 4 ONLINE COURSE APPLY NOW

மேலும் விவரங்களுக்கு

Call us at 8101234234

விடைகள்:

1. (C) 20 செ.மீ
2. (D) ரூ. 400, ரூ. 200, ரூ.100
3. (B) 2,59,200
4. (C) 800
5. (B) 1:2:3
6. (B) 20%
7. (C) 1000
8. (D) 64
9. (C) ரூ.120
10. (B) 5%
11. (B) ரூ.2,000
12. (C) 20 மீ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here