TNPSC குரூப் 4: 2013 ல் கேட்கப்பட்ட முக்கிய பொது அறிவு வினாக்கள்…, முடிந்தால் விடை கண்டுபிடியுங்கள்!!!

0
TNPSC குரூப் 4: 2013 ல் கேட்கப்பட்ட முக்கிய பொது அறிவு வினாக்கள்..., முடிந்தால் விடை கண்டுபிடியுங்கள்!!!
TNPSC குரூப் 4: 2013 ல் கேட்கப்பட்ட முக்கிய பொது அறிவு வினாக்கள்..., முடிந்தால் விடை கண்டுபிடியுங்கள்!!!

TNPSC குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து தேர்வர்கள் அதற்கு மும்மரமாக தயாராகி வருகின்றனர். இந்த நேரத்தில் அவர்களுக்கு உதவும் வகையில் 2013 ஆம் ஆண்டு குரூப் 4 தேர்வில் கேட்கப்பட்ட முக்கிய பொது அறிவு வினாக்கள் விடையுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1.இரத்தம் உறைதலுக்கு அவசியமான வைட்டமின் மற்றும் தாது உப்பை (தனிமத்தை) பெயரிடுக??

(A) வைட்டமின் D மற்றும் கால்சியம்

(B) வைட்டமின் B மற்றும் சோடியம்

(C) வைட்டமின் K மற்றும் கால்சியம்

(D) வைட்டமின் C மற்றும் அயோடின்

2.ஒளிச்சேர்க்கையின் போது வெளியிடப்படும் வாயு எது?

(A) கார்பன்-டை-ஆக்ஸைடு

(B) நைட்ரஜன்

(C) ஹைட்ரஜன்

(D) ஆக்ஸிஜன்

3.பின்வருவனவற்றுள் பொருந்தாதது எது?

(A) வேளாண் பயிர்கள் – பசுமை புரட்சி

(B) முட்டை மற்றும் கோழி வளர்ப்பு – வெண்மை புரட்சி

(C) கடல்சார் பொருட்கள் – நீலப்புரட்சி

(D) தோட்டக்கலை – தங்க புரட்சி

4.பின்வருவனவற்றுள் எதில் மின்னூட்டங்களுக்கிடையே உணரப்படும் விலக்கு மற்றும் ஈர்ப்பு விசை பயன்படுகிறது?

(A) A.C.மின்னியற்றி

(B) நிலைமின் வண்ணம் தெளித்தல்

(C) மின்னழுத்தமானி

(D) மீட்டர் சமனச்சுற்று

5.இரண்டு தனி ஊசலின் அலைவு காலம் 2 : 1 என்ற விகிதத்தில் உள்ளது. அவைகளின் நீளத்திற்கான விகிதம் முறையை கண்டறிக

(A) 4:1

(B) 1:4

(C) 1:1

(D) 1:2

6.கீழே கொடுக்கப்பட்டவைகளில் இருந்து சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்:

தொடர்ச்சியான இடியுடன் கூடிய புயலின் விளைவால் ஏற்படுவது.

(A) நிலச்சரிவும் வெள்ளமும்

(B) ஆழிப்பேரலைகள்

(C) நிலநடுக்கம்

(D) எரிமலை வெடிப்பு

7.கீழே கொடுக்கப்பட்டுள்ள வேதிப் பொருட்களின் குழுமத்திற்குப் பொருந்தாததைக் கண்டறி : BHC, DDT, 2,4-D,

(A) BHC

(B) DDT

(C) 2.4-D

(D) யூரியா

8.உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி யார்?

(A) அன்னா சான்டி

(B) விஜயலெட்சுமி பண்டிட்

(C) இந்திரா காந்தி

(D) பாத்திஷா பீவி

9.போபால் துயரச் சம்பவம் நடைபெற்ற ஆண்டு

(A) 1980

(B) 1978 Į

(C) 1975

(D) 1984

10.‘அக்னி சிறகுகள்’ என்ற புத்தகத்தை எழுதியவர்

(A) நேரு

(B) A.P.J.அப்துல் கலாம்

(C) காமராஜ்

(D) மகாத்மா காந்தி

11. இந்தியாவின் குடியரசுத் தலைவர்களை, அவர்களின் பதவிக்கால அடிப்படையில் வரிசைப்படுத்துக.

1.ஆர்.வெங்கட்ராமன்

2.டாக்டர் சங்கர் தயாள் சர்மா

3.டாக்டர் கே.ஆர்.நாராயணன்

4.டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்

(A) I, II, III, IV

(B) III, IV, I, II

(C) III, I, II, IV

(D) III, II, I, IV

12. உரம் பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?

I. அது விலை குறைவாக கிடைக்க வேண்டும்.

II. அது தாவரங்களால் எளிதில் உறிஞ்சத்தக்க வகையில் இருக்க வேண்டும்.

|||. அது நீரில் எளிதில் கரையக்கூடாது.

(A) I மற்றும் II

(B) II மற்றும் III

(C) I மற்றும் III

(D) III மட்டும்

இதேபோன்று TNPSC தேர்வுக்கு முக்கியமான வினாக்களையும், தேர்வுகளையும் பிரபல Examsdaily நிறுவனம் அனுபவம் உள்ள ஆசிரியர்களை கொண்டு நடத்தி வருகிறது. இதற்கு பயிற்சி கட்டணமாக ரூ.7500 மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது போன்ற சிறந்த பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள கீழே உள்ள எண்ணை தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு

Call us at 8101234234

விடைகள்:

1. (C) வைட்டமின் K மற்றும் கால்சியம்
2. (D) ஆக்ஸிஜன்
3. (B) முட்டை மற்றும் கோழி வளர்ப்பு – வெண்மை புரட்சி
4. (B) நிலைமின் வண்ணம் தெளித்தல்
5. (A) 4:1
6. (A) நிலச்சரிவும் வெள்ளமும்
7. (D) யூரியா
8. (D) பாத்திஷா பீவி
9. (D) 1984
10. (B) A.P.J.அப்துல் கலாம்
11. (A) I, II, III, IV
12. (A) I மற்றும் II

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here