கோலிவுட் திரையில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் அண்மையில் திரைக்கு வந்த ”லியோ” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் கல்லா கட்டியுள்ளது. மேலும் லோகேஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171 ஆவது படத்தை இயக்க போவதாக சில மாதங்களுக்கு முன் தகவல் வெளியாகியிருந்தது.
Enewz Tamil WhatsApp Channel
மேலும் இப்படம் முற்றிலும் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாக இருக்கும் என்றும், இதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இப்படி இருக்கையில் ”தலைவர் 171” படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ராகவா லாரன்ஸ் கமிட்டாகி உள்ளார் என்ற செய்தி கிடைத்துள்ளது. இந்த செய்தியை கேட்ட ராகவா லாரன்ஸ் ரசிகர்கள் குஷியில் குதித்து வருகின்றனர்.