TNPSC குரூப் 4 தேர்வர்களே…, 2013 & 2019 யில் கேட்கப்பட்ட முக்கிய பொது தமிழ் வினாக்கள்…, உங்களால் விடையளிக்க முடியுமா??

0
TNPSC குரூப் 4 தேர்வர்களே..., 2013 & 2019 யில் கேட்கப்பட்ட முக்கிய பொது தமிழ் வினாக்கள்..., உங்களால் விடையளிக்க முடியுமா??
TNPSC குரூப் 4 தேர்வர்களே..., 2013 & 2019 யில் கேட்கப்பட்ட முக்கிய பொது தமிழ் வினாக்கள்..., உங்களால் விடையளிக்க முடியுமா??

TNPSC தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வுக்காக தேர்வர்கள் அனைவரும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இத்தகைய தேர்வர்களுக்கு பெரும் உதவியாகவும், சிறந்த வழிகாட்டியாகவும் இருக்கும் வகையில், 2013 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் குரூப் 4 தேர்வில் கேட்கப்பட்ட முக்கிய பொது தமிழ் வினாக்களும், அதன் விடைகளும் கீழே தொகுக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளன.

1. பெயர்ச்சொல்லின் வகையறிதல் :
‘ஆதிரையான்’ என்ற பெயர்ச்சொல்லின் வகையறிக.

(A) பண்புப்பெயர்

(B) தொழிற்பெயர்

(C) காலப்பெயர்

(D) குணப் பெயர்

2. ‘அழக்கொண்ட எல்லாம் அழப்போம். இழப்பினும்’ – இந்த அடியில் அமைந்துள்ள எதுகையைத்

தேர்க.

(A) கூழை எதுகை

(B) மேற்கதுவாய் எதுகை

(C) கீழ்க்கதுவாய் எதுகை

(D) பொழிப்பு எதுகை

3. திரு.வி.க. இயற்றிய ‘பொதுமை வேட்டல்’ என்னும் நூலில் உள்ள பாக்களின் எண்ணிக்கை

(A) நானூற்று முப்பது

(B) இருநூற்று ஒன்று

(C) முந்நூற்று ஆறு

(D) நானூற்று எழுபது

4. “கல்” என்னும் வேர்ச்சொல்லின் பதம் அறிக?

(A) கற்றல்

(B) கற்பனை

(C) கண்டான்

(D) கல்லை

5. ‘பாவை பாடிய வாயால் கோவை பாடுக’ என்று சொல்லக் கேட்டு பாடப்பட்ட நூல் எது?

(A) அசதிக் கோவை

(B) ஆசாரக்கோவை

(C) திருக்கோவையார்

(D) மும்மணிக்கோவை

6. மிசை – எதிர்ச்சொல் காண்க:

(A) இசை

(B) கீழ்

(C) விசை

(D) நாள்

7. பரணி இலக்கியத்திற்குரிய பாவகையைக் குறிப்பிடுக.

(A) வெண்பா

(B) விருத்தப்பா

(C) கலி விருத்தம்

(D) கலித்தாழிசை

8. நாமக்கல் கவிஞருக்கு “பத்மபூஷண்’ விருது வழங்கிச் சிறப்பித்தது யார்?

(A) நடுவணரசு

(B) மாநில அரசு

(C) ஆங்கில அரசு

(D) பிரெஞ்சு அரசு

9. வினாவிற்கு உரிய விடை எழுதுக: தமிழை ஆலென வளர்த்து மாண்புறச் செய்தவர் யார்?

(A) பரிதிமாற் கலைஞர்

(B) மு.வரதராசன்

(C) தேவநேயப் பாவாணர்

(D) புதுமைப்பித்தன்

10. வருக – என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க

(A) வினையெச்சம்

(B) உருவகம்

(C) உரிச்சொல் தொடர்

(D) வியங்கோள் வினைமுற்று

11. லிட்டன் பிரபு’ எழுதிய ‘இரகசிய வழி’ என்ற நூலைத் தழுவி வெளிவந்த நூல்

(A) மனோன்மணியம்

(B) அகத்தியம்

(C) முறுவல்

(D) குணநூல்

12. பின்வரும் சொற்களில் குற்றியலுகரம் அல்லாத சொல்லை கண்டறிக.

(A) மார்பு

(B) வரகு

(C) மடு

(D) மாசு

இது போன்ற முக்கியமான பொது தமிழ் வினாக்களுடன், கூடுதல் தகவல்களையும் சேர்ந்து, தேர்விற்கு தயாராகுவதற்கு ஏற்ப அனுபவம் உள்ள ஆசிரியர்களை கொண்டு பிரபல Examsdaily நிறுவனம் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. ரூ. 7,500 மதிப்பிலான இத்தகைய பயிற்சி வகுப்புகளை தேர்வர்கள் சிறந்த முறையில் பயன்படுத்தி கொண்டு, தேர்வில் வெற்றி பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்தும், விண்ணப்பத்தை பூர்த்தி செய்தும் தேர்வுக்கு தயாராகுங்கள்.

TNPSC GROUP 4 ONLINE COURSE APPLY NOW

மேலும் விவரங்களுக்கு

Call us at 8101234234

விடைகள்:
1. (C) காலப்பெயர்
2. (B) மேற்கதுவாய் எதுகை
3. (A) நானூற்று முப்பது
4. (A) கற்றல்
5. (C) திருக்கோவையார்
6. (B) கீழ்
7. (D) கலித்தாழிசை
8. (A) நடுவணரசு
9. (C) தேவநேயப் பாவாணர்
10. (D) வியங்கோள் வினைமுற்று
11. (A) மனோன்மணியம்
12. (C) மடு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here