TNPSC குரூப் 4 தேர்வர்களே…, 2013 & 2014 யில் கேட்கப்பட்ட முக்கிய பொது அறிவு வினாக்கள்…, உங்களால் விடையளிக்க முடியுமா??

0
TNPSC குரூப் 4 தேர்வர்களே..., 2013 & 2014 யில் கேட்கப்பட்ட முக்கிய பொது அறிவு வினாக்கள்..., உங்களால் விடையளிக்க முடியுமா??
TNPSC குரூப் 4 தேர்வர்களே..., 2013 & 2014 யில் கேட்கப்பட்ட முக்கிய பொது அறிவு வினாக்கள்..., உங்களால் விடையளிக்க முடியுமா??

TNPSC குரூப் 4 தேர்வுக்காக, தேர்வர்கள் அனைவரும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில், இவர்களுக்கு பெரும் உதவியாகவும், சிறந்த வழிகாட்டியாகவும் இருக்கும் வகையில், 2013 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் குரூப் 4 தேர்வில் கேட்கப்பட்ட முக்கிய பொது அறிவு வினாக்களும், அதன் விடைகளும் கீழே தொகுக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளன.

1. இரத்தம் உறைதலுக்கு அவசியமான வைட்டமின் மற்றும் தாது உப்பை (தனிமத்தை) பெயரிடு

(A) வைட்டமின் D மற்றும் கால்சியம்

(B) வைட்டமின் B மற்றும் சோடியம்

(C) வைட்டமின் K மற்றும் கால்சியம்

(D) வைட்டமின் C மற்றும் அயோடின்

2. லென்ஸ் ஒன்றின் திறன் -0.5 டையாப்டர் எனில் அதன் குவியத் தூரம் மற்றும் வகை என்ன?

(A) 2.மீ. குழி

(B) 2மீ. குவி

(C) 50 செ மீ, குழி

(D). 50 செ மீ, குவி

3. ஒளிச்சேர்க்கையின் போது வெளியிடப்படும்.வாயு எது?

(A) கார்பன் – டை – ஆக்ஸைடு

(B) நைட்ரஜன்

(C) ஹைட்ரஜன்

(D) ஆக்ஸிஜன்

4. வேறுப்பட்டு இருப்பதை கண்டுபிடி:

வெப்பத்துடன் சம்பந்தப்பட்டது – ஒரு செயலில்

(A) கடத்தல்

(B) சலனம்

(C) உட்கவர்தல்

(D) கதிர்வீசல்

5. பின்வருவனவற்றுள் எதில் மின்னூட்டங்களுக்கிடையே உணரப்படும் விலக்கு மற்றும் ஈர்ப்பு விசை பயன்படுகிறது?

(A) A.C. மின்னியற்றி

(B) நிலைமின் வண்ணம் தெளித்தல்

(C) மின்னழுத்தமானி

(D) மீட்டர் சமனச்சுற்று

6. கீழே கொடுக்கப்பட்டவைகளில் இருந்து சரியான பதிலை தேர்ந்தெடுக்கவும்:

தொடர்ச்சியான இடியுடன் கூடிய புயலின் விளைவால் ஏற்படுவது.

(A) நிலச்சரிவும் வெள்ளமும்

(B) ஆழிப்பேரலைகள்

(C) நிலநடுக்கம்

(D) எரிமலை வெடிப்பு

7. சூடோமோனாஸ் எனும் மரபு பொறியியல் மூலம் உருவாக்கப்பட்ட பாக்டீரியாவைக் கண்டறிந்தவர்

(A) Dr. அயன் வில்மட்

(B) Dr. கொரானா

(C) Dr. சந்திரசேகர்

(D) Dr. ஆனந்த மோகன் சக்ரபர்த்தி

8. பத்தாவது ஐந்தாண்டு திட்ட காலம்

(A) 2002-2007

(B) 2007-2012

(C) 1997-2002

(D) 1992-1997

9. அடிப்படை உரிமைகள் இந்திய அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டுள்ள பகுதி

(A) பகுதி II

(B) பகுதி III

(C) பகுதி I

(D) பகுதி IV

10. உலக நாடுகளை, அமெரிக்க உளவு நிறுவனம், ரகசியமாக மின்னணு மூலம் கண்காணித்ததை உலகிற்கு வெளிப்படுத்திய அமெரிக்க உண்மை விளம்பி

(A) ஜீலியன் அஸ்ஸானேஜ்

(B) டேனியல் பால்

(C) எட்வர்ட் ஸ்னோடென்

(D) மைக் டைசன்

11. 42-வது சட்ட திருத்தம் நடைமுறைக்கு வந்த ஆண்டு

(A) 1947

(B) 1976

(C) 1967

(D) 1958

12. பின்வருவனவற்றுள் எது EMP வழித்தடம் எனவும் அழைக்கப்படும்?

A) கிளைகாலிஸிஸ்

(B) கிரெப் சுழற்சி

(C) எலக்ட்ரான் கடத்தல் சங்கிலி

(D) பென்டோஸ் பாஸ்பேட் வழித்தடம்

இது போன்ற முக்கியமான பொது அறிவு வினாக்களுடன், கூடுதல் தகவல்களையும் சேர்ந்து, அனுபவம் உள்ள ஆசிரியர்களை கொண்டு பிரபல Examsdaily நிறுவனம் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. ரூ. 7,500 மதிப்பிலான இத்தகைய பயிற்சி வகுப்புகளை தேர்வர்கள் சிறந்த முறையில் பயன்படுத்தி கொண்டு, தேர்வில் வெற்றி பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தேர்வுக்கு தயாராகுங்கள்.

TNPSC GROUP 4 ONLINE COURSE APPLY NOW

மேலும் விவரங்களுக்கு

Call us at 8101234234

விடைகள்:

1. (C) வைட்டமின் K மற்றும் கால்சியம்
2. (A) 2.மீ. குழி
3. (D) ஆக்ஸிஜன்
4. (C) உட்கவர்தல்
5. (B) நிலைமின் வண்ணம் தெளித்தல்
6. (A) நிலச்சரிவும் வெள்ளமும்
7. (D) Dr. ஆனந்த மோகன் சக்ரபர்த்தி
8. (A) 2002-2007
9. (B) பகுதி III
10. (C) எட்வர்ட் ஸ்னோடென்
11. (B) 1976
12. A) கிளைகாலிஸிஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here