TNPSC குரூப் 4 தேர்வர்களே…, 2012 & 2013 யில் கேட்கப்பட்ட முக்கிய கணித வினாக்கள்…, உங்களால் முடிந்தால் விடையளியுங்கள்!!

0
TNPSC குரூப் 4 தேர்வர்களே..., 2012 & 2013 யில் கேட்கப்பட்ட முக்கிய கணித வினாக்கள்..., உங்களால் முடிந்தால் விடையளியுங்கள்!!
TNPSC குரூப் 4 தேர்வர்களே..., 2012 & 2013 யில் கேட்கப்பட்ட முக்கிய கணித வினாக்கள்..., உங்களால் முடிந்தால் விடையளியுங்கள்!!

குரூப் 4 தேர்வுக்காக, TNPSC தேர்வர்கள் அனைவரும் படு தீவிரமாக தயாராகி வருகின்றனர். இத்தகைய தேர்வர்களுக்கு பெரும் உதவியாகவும், சிறந்த வழிகாட்டியாகவும் இருக்கும் வகையில், 2012 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் குரூப் 4 தேர்வில் கேட்கப்பட்ட முக்கிய கணித வினாக்களும், அதன் விடைகளும் கீழே தொகுக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளன.

1. இரு எண்களின் இசை சராசரி மற்றும் பெருக்கல் சராசரி. முறையே 6-4 மற்றும் 8 ஆகும். அவ்வெண்களாவன

A) 8 மற்றும் 8

B) 32 மற்றும் 2

C) 4 மற்றும் 16

D) 10 மற்றும் 6

2. அடுத்தடுத்து வரும் மூன்று முழு மதிப்புகளின் கூட்டுத்தொகை 540 எனில், அம்மதிப்புகளைக் காண்க.

A) 178, 179, 183

B) 176, 186, 178

C) 178. 180. 182

D) 179, 180, 181.

3. பின்வரும் எண்கள் தொடர் வரிசையில் பொருந்தாத எண்ணைக் கண்டுபிடி.

1, 144, 16, 25, 49, 81, 121, 36, 62

(A) 1

(B) 49

(C) 121

(D) 62

4. ஒரு தேர்வில் 30% மாணாக்கியர் ஆங்கிலப் பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை. 40% மாணாக்கியர் ஹிந்திப் பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை. இரண்டு பாடத்திலும் தேர்ச்சி பெறாதவர்கள் 20% என்றால் இரண்டு பாடத்திலும் தேர்ச்சி பெற்ற மாணாக்கியரின் சதவிகிதம் என்ன?

(A) 50%

(B) 20%

(D) 60%

(C) 10%

5. குறிப்பிட்ட தனிவட்டி வீதத்தில், ரூ.800 ஆனது மூன்றாண்டுகளில் ரூ..956 ஆக உயர்கிறது. தனிவட்டி வீதத்தை 4% அதிகரிப்பதால், மூன்றாண்டுகளுக்குப் பின் ரூ. 800 ன் மதிப்பு, எந்த தொகையாக மாறும்?

(A) RS. 1,020.80

(B) RS. 1,025

(C) RS. 1,052

(D) RS. 1,080.20

6. அமலா, ரூபாய் 6,000-த்தை ஒரு முதலீடு செய்கின்றார். இதில் முதலாண்டில் 4% வட்டியும். இரண்டாமாண்டில் 5% வட்டியும், மூன்றாமாண்டில் 10% வட்டியும் கிடைக்கும் எனில், மூன்றாமாண்டின் முடிவில் அமலா பெறும் தொகை யாது?

(A) RS. 7,300

(B) RS. 7,007.2

(C) RS. 7,200

(D) RS. 7,207.2

7. 2+3=89, 3+4=2716, 4+3=649, எனில் 1+2=?

(A) 24

(B) 14

(C) 4

(D) 10

8. வெவ்வேறான 5 பொருட்கள் A, B, C, D மற்றும் E ஆகியவற்றை 1, 2, 3, 4, 5 எனக் குறிக்கப்பட்ட பெட்டிகளில் வைக்க வேண்டும். B மற்றும் E ஆகியவற்றை ஒன்றாக வைக்க முடியாது, எனில் பொருட்கள் வைக்கப்படாத பெட்டிகளின் அதிகபட்ச எண்ணிக்கை

(A) 1

(B) 2

(C) 3

(D) 0

9. ஒரு வகுபடும் எண்ணின் வகுத்தியானது ஈவைப்போல் 12 மடங்கு, மீதியைப் போல் 5 மடங்கு உள்ளது. மேலும் மீதியானது 24 எனில், வகுபடும் எண்

A) 1224

B) 1242

C) 1222

D) 120

10. ஒரு வியாபாரியானவர் தன்னிடம் உள்ள பொருட்களை அடக்க விலையை விட 20% கூடுதலாக விலை நிர்ணயம் செய்து குறிப்பிட்டு, பின் 10% தள்ளுபடியில் விற்பனை செய்கிறார் எனில், அவரது இலாப சதவீதம்

A) 6%

B) 8%

C) 10%

D) 12%

11. கூட்டு வட்டி முறையில், ஒரு தொகையானது இரண்டு ஆண்டுகளில் ஒன்பது மடங்கு ஆகின்றது எனில், அதன் வட்டி வீதம் யாது?

(A) 100%

(B) 200%

(C) 300%

(D) 150%

12. மீப்பெரு பொது காரணி 15 ஆக இருக்குமாறு எத்தனை ஜோடி எண்கள் 40 க்கும் 100 க்கும் இடையே இருக்கும்?

(A) 3

(B) 4

(C) 5

(D) 2

இது போன்ற முக்கியமான கணித வினாக்களையும், இந்த வினாக்கள் தொடர்பான விளக்கங்கள் மற்றும் கூடுதல் தகவல்களையும் சேர்ந்து, அனுபவம் நிறைந்த ஆசிரியர்களை கொண்டு பிரபல Examsdaily நிறுவனம் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. ரூ. 7,500 மதிப்பிலான இந்த பயிற்சி வகுப்புகளை தேர்வர்கள் சிறந்த முறையில் பயன்படுத்தி கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்தும், விண்ணப்பத்தை பூர்த்தி செய்தும் தேர்வுக்கு தயாராகுங்கள்.

மேலும் விவரங்களுக்கு

Call us at 8101234234

விடைகள்:

1. (C) 4 மற்றும் 16
2. (D) 179, 180, 181.
3. (D) 62
4. (A) 50%
5. (C) RS. 1,052
6. (D) RS. 7,207.2
7. (B) 14
8. (C) 3
9. (A) 1224
10. (B) 8%
11. (B) 200%
12. (B) 4

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here