தமிழகப் பெண்களுக்கு இலவச தையல் மெஷின்.,6ம் தேதிக்குள் விண்ணப்பிக்க உத்தரவு! விவரம் உள்ளே!!

0
தமிழகப் பெண்களுக்கு இலவச தையல் மெஷின்.,6ம் தேதிக்குள் விண்ணப்பிக்க உத்தரவு! விவரம் உள்ளே!!
தமிழகப் பெண்களுக்கு இலவச தையல் மெஷின்.,6ம் தேதிக்குள் விண்ணப்பிக்க உத்தரவு! விவரம் உள்ளே!!

தமிழகத்தில் சமூக நலத்துறை மூலம், பொருளாதாரத்தில் நலிவடைந்த மற்றும் பின்தங்கிய பெண்களுக்கு தையல் மெஷின் வழங்கும் திட்டம் குறித்து அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.

அரசு அறிவிப்பு :

தமிழக சமூக நலத்துறை மூலமாக, சமூகத்தில் கணவனால் கைவிடப்பட்ட மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த மற்றும் பின்தங்கிய பெண்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இவர்கள் சுய தொழில் தொடங்கி தங்கள் வாழ்வை முன்னேற்றிக் கொள்ள, அரசின் சார்பாக தையல் மெஷின் வழங்கும் திட்டம் 30 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

கடந்தாண்டு இத்திட்டத்திற்கு ரூபாய் 1.35 கோடி செலவிடப்பட்டு, 2250 பெண்களுக்கு தையல் மெஷின் வழங்கப்பட்டது. தற்போது, இந்த ஆண்டு இதற்கு விண்ணப்பிக்க 20 முதல் 40 வயது வரை உள்ள பெண்கள் வரும் 6ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரேஷன் பொருள் தீர்ந்து போச்சா? இனி உங்களுக்கு உதவித்தொகை கன்பார்ம்., அரசு அதிரடி உத்தரவு!!

விண்ணப்பிக்க விரும்புவோர் தங்கள் வயது சான்று, ஜாதி சான்று, ஆதார் அட்டை உள்ளிட்ட விவரங்களுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமூக நலத்துறையிடம் சமர்பிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பெண்கள், இதற்கு தகுந்த நேரத்தில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here