மம்முட்டிக்கு கைமாறிய படவாய்ப்பு.., ஷூட்டிங் ஸ்பாட்டில் வேட்டியை மடித்து சண்டைக்கு நின்ற விஜயகாந்த்!!

0
மம்முட்டிக்கு கைமாறிய படவாய்ப்பு.., ஷூட்டிங் ஸ்பாட்டில் வேட்டியை மடித்து சண்டைக்கு நின்ற விஜயகாந்த்!!
மம்முட்டிக்கு கைமாறிய படவாய்ப்பு.., ஷூட்டிங் ஸ்பாட்டில் வேட்டியை மடித்து சண்டைக்கு நின்ற விஜயகாந்த்!!

தமிழ் சினிமாவில் எண்ணற்ற ரசிகர்களை கைக்குள் வைத்து, நடிகர்களுக்கு ஏதேனும் ஒரு பிரச்சனை இருந்தாலும் முன்னாடி நின்று தீர்த்து வைப்பவர் தான் கேப்டன் விஜயகாந்த். ஆரம்பத்தில் பட வாய்ப்பு கிடைக்காமல் அவரும், அவருடைய நண்பர் இப்ராஹிம் ராவுத்தரும் தத்தளித்து வந்தனர். அதன் பின்னர் சில வாய்ப்புகள் கிடைத்து வெற்றி படியில் நடக்க தொடங்கினர். அதுமட்டுமின்றி நம்ம நல்ல நிலைமைக்கு வந்துட்டோம் என்று எண்ணம் கொள்ளாமல் ராவுத்தர் புரொடக்ஷன் கம்பெனியை ஆரம்பித்து இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வளர்த்துவிட்டர்கள். ஒரு கட்டத்தில் மற்ற நிறுவனத்தின் தயாரிப்பில் விஜயகாந்த் படு பிசியாக நடித்து வந்த நிலையில், ராவுத்தர் 5 படங்கள் பண்ணனும் என்று திட்டமிடுகிறார். அதில் ஒரு படத்தை மனோபாலாவிடம் கொடுக்கிறார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

விஜயகாந்த் பிசி எனவே வேறு ஒரு ஹீரோவை வைத்து பன்னலாம் என்று மனோபாலாவிடம் கூறி விடுகிறார். இதனை தொடர்ந்து மனோபாலாவும் தனது நண்பர் மாதவனும் இணைந்து கிறிஸ்தவ சம்பந்தப்பட்ட ஒரு கதையை மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் என்ற பெயரில் ரெடி செய்தனர். மேலும் அந்த படத்தில் நடிக்க மம்முட்டி கமிட்டானார். ஆனால் சில காரணத்தால் அந்த படத்தில் விஜயகாந்தே நடித்தார். படத்தோட ஷூட்டிங் நடந்த இடத்தில ஒரு ஆறு சென்று கொண்டிருக்கிறது. அந்த ஆறுக்கு ஒரு பக்கம் கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். மறுபக்கம் சில சமுதாயத்தை சேர்ந்த மக்கள் இருக்கிறார்கள். இவர்களோ ஷூட்டிங்கை சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் இருக்கும் பகுதியில் நடத்தியுள்ளனர்.

அஜித்,விஜய்க்கு ஏன் சம்பளம் கொடுக்குறீங்க? “எதிர்நீச்சல்” குணசேகரன் ஆவேசம்!!

அதற்கு கிறிஸ்தவர்கள் எங்களை பற்றி எடுக்கும் படத்தை எப்படி அந்த இடத்தில் எடுக்கலாம் என்று படக்குழுவினருடன் சண்டைக்கு நின்றனர். அப்போது இரு தரப்பினருக்கும் காரசாரமாக வாய் தகராறு ஏற்படுகிறது. இதை பார்த்த விஜயகாந்த் காரில் இருந்து இறங்கி சமாதானம் படுத்த முயற்சி செய்தார். ஆனால் அந்த கூட்டமோ அடங்கவில்லை. அதனால ஆத்திரம் அடைந்த விஜயகாந்த், “டேய் நான் தான் பேசிட்டு இருக்கேன்ல அப்புறம் என்ன குறுக்க பேசுற” என்று வேட்டியை மடித்து கட்டி கோபத்தில் கத்தினார். அதன் பிறகு கூட்டம் கலைந்து சென்றது. கேப்டன் அப்பவே பெரிய சம்பவத்தை செஞ்சுருக்காரு என்று நெட்டிசன்கள் பேசி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here