
பருவநிலை மாற்றம் காரணமாக தமிழகத்தை நோக்கி வீசும் மேற்கு திசை காற்றின் வேகத்தில் மாறுபாடு நிலவுவதால், தமிழகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இன்று (செப்டம்பர் 12) மழைக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில் குறிப்பாக, தமிழகத்தில் உள்ள 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அதாவது, திருப்பூர், நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, தென்காசி மற்றும் நெல்லை ஆகிய 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் செப்டம்பர் 16ஆம் தேதி வரையிலும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு அதிக வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
IND vs PAK: பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா…, 228 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி!!