
தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஒரு சில பகுதிகளில் நடைபெறும் கலாச்சார பண்டிகை தினங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் உத்திரபிரதேசத்தில் உள்ள நொய்டா நகரில் கலாச்சார நிகழ்வான “குரு துரோணாச்சார்யா மேளா” ஆண்டுதோறும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டில் இன்று (செப்டம்பர் 12) குரு துரோணாச்சார்யா மேளா நடைபெற உள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதனை கருத்தில் கொண்டு நொய்டா மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள் என அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று (செப்டம்பர் 12) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தர்ம்வீர் சிங் அறிவித்துள்ளார். நாளை (செப்டம்பர் 13) முதல் கல்வி நிறுவனங்கள் வழக்கமாக செயல்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.