இலங்கையில் ஆசிய கோப்பை தொடருக்கான சூப்பர் 4 சுற்றுகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று முன் தினம் நடைபெற இருந்தது. ஆனால், மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டு ரிசர்வ் நாளான நேற்று தொடங்கியது. இதில், பாகிஸ்தானின் பந்து வீச்சை துவம்சம் செய்த இந்தியாவின் விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் அதிரடியாக விளையாடி சதங்களை கடந்து, அணியின் ஸ்கோரை 356 -ஆக உயர்த்தினர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
50 ஓவர் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 356 ரன்கள் எடுத்த நிலையில், விராட் கோலி 122*, கே எல் ராகுல் 111* ரன்களுடன் களத்தில் இருந்தனர். இதையடுத்து, கடின இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி இந்தியாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 32 ஓவரில் 128 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 228 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்வியை தழுவியது.
இந்த போட்டி மூலம் நிகழ்ந்த சில சாதனை துளிகள் இதோ:
- பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஒருநாள் வடிவில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அணியாக இந்தியா சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் 2008ல் 140 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று இருந்தது.
- இந்த போட்டியில், விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் பார்ட்னர்ஷிப் அமைத்து 233 ரன்கள் சேர்த்ததன் மூலம், ஆசிய கோப்பை வரலாற்றில் பெஸ்ட் பார்ட்னர்ஷிப் என்ற பெருமைக்கு சொந்தக்காரர்களாக மாறியுள்ளனர்.
- சர்வதேச ஒருநாள் அரங்கில் 4 இந்திய பேட்ஸ்மேன்கள் அரைசதத்தை கடந்திருப்பது இது 4வது முறையாகும். ரோஹித் சர்மா 56, சுப்மன் கில் 58, விராட் கோலி 122*, கே எல் ராகுல் 111*.