கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கி வந்தது. இந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை பகுதியில் வளிமண்டலத்தின் கீழடுகில் சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் திருநெல்வேலி, கோயம்புத்தூர், தூத்துக்குடி உள்ளிட்ட ஊர்களில் லேசான முதல் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதிலும் குறிப்பாக அடுத்த 24 மணி நேரத்தில் சென்னையில் சில நகர்ப்புறங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாம். மேலும் இன்று முதல் 18 ஆம் தேதி வரை தமிழக மற்றும் வங்கக்கடல் பகுதியில் 40 முதல் 80 கிலோ மீட்டர் வரையிலான சூறாவளி காற்று வீசக்கூடும். இதனால் அந்த நாட்களில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.