இந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு லீவு., இதற்கு பதில் ஜன 21ம் தேதி முழு வேலை நாள்! அறிவிப்பு வெளியீடு!!

0
இந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு லீவு., இதற்கு பதில் ஜன 21ம் தேதி முழு வேலை நாள்! அறிவிப்பு வெளியீடு!!

தமிழகத்தில் நாளை இந்த மாவட்டத்திற்கு முழு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக, மாவட்ட நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

முழு விடுமுறை :

தமிழகத்தில் மார்கழி மாதத்தை முன்னிட்டு, பல கோவில்களில் முக்கிய பாரம்பரிய விசேஷ நிகழ்வுகள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், மார்கழி மாதத்தின் முக்கிய நிகழ்வான ஆருத்ரா தரிசனம்  சைவ கோயில்களில்  வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதன் தொடர்ச்சியாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திரு உத்தரகோசமங்கை மற்றும் ஸ்ரீ மங்களநாத சுவாமி திருக்கோயில் ஆருத்ரா தரிசன திருவிழா, ஜனவரி 6 ஆம் தேதியான நாளை நடைபெற உள்ளது.
கொரோனா காரணமாக, இரண்டு ஆண்டு இடைவெளிக்கு பிறகு, இந்த நிகழ்வை காண பக்தர்கள் கூட்டம் அதிகம் வரும் என்பதால், நாளை ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடுகட்ட ஜனவரி 21 ஆம் தேதியான சனிக்கிழமை முழு வேலை நாளாக செயல்படும் என்றும், மாவட்ட நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here