கிரிக்கெட் வீராங்கனைகாக வெண்கல சிலை திறப்பு…, கவுரவிக்கப்பட்ட முன்னாள் கேப்டன்!!

0
கிரிக்கெட் வீராங்கனைகாக வெண்கல சிலை திறப்பு..., கவுரவிக்கப்பட்ட முன்னாள் கேப்டன்!!
கிரிக்கெட் வீராங்கனைகாக வெண்கல சிலை திறப்பு..., கவுரவிக்கப்பட்ட முன்னாள் கேப்டன்!!

ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் டெஸ்ட் தொடர் சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த மைதானத்தில், ஆஸ்திரேலியாவின் மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான பெலிண்டா கிளார்க்-கு வெண்கல சிலையை வைத்து கிரிக்கெட் வாரியம் கவுரவித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

பெலிண்டா கிளார்க் 1991 முதல் 2005 வரை ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடி உள்ளார். இவர் சர்வதேச அணிக்காக விளையாட ஆரம்பித்த 4 வருடத்திலேயே கேப்டனாக பதவி உயர்வு பெற்றார். இவர் கிரிக்கெட்டில் படைத்துள்ள சாதனையை இன்றளவும் எந்த ஒரு வீராங்கணையாலும் எட்ட முடியவில்லை. அந்த சாதனையானது, 1997 ல் டென்மார்க்கிற்கு எதிராக பெலிண்டா கிளார்க் இரட்டை சதம் அடித்த முதல் மற்றும் ஒரே வீராங்கனை ஆவார். இவர் 229* ரன்கள் எடுத்திருந்தார்.

இந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு லீவு., இதற்கு பதில் ஜன 21ம் தேதி முழு வேலை நாள்! அறிவிப்பு வெளியீடு!!

இவருக்கு சிட்னி மைதானத்தில், வெண்கல சிலை வைத்தது குறித்து பெலிண்டா கிளார்க், எனக்காக சிற்பம் வைத்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இந்த சிலையை மக்கள் பார்க்கும் போது, இவர் யார் என கேள்வி எழுப்புவர். அதற்கு ஒரு கதையை அனைவரும் கூறுவர். அது எனக்கு மிக மகிழ்ச்சியை தரும் என பெருமையுடன் கூறியுள்ளார். கிரிக்கெட் வீராங்கனைக்காக சிலை வைத்திருப்பது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here